Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெற்றால்தான் பிள்ளையா? 100 குழந்தைகளுக்கு 1.6 லட்சம் கோடி சொத்தை எழுதி வைத்த டெலிகிராம் ஓனர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தனது 1.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது ஆறு பிள்ளைகள் மட்டும் இன்றி விந்தணு தானத்தில் மூலம் பிறந்த சுமார் 100 பிள்ளைகளுக்கும் சரிசமமாக சொத்துக்களை பிரித்து உயில் எழுதி வைத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

வாட்ஸ் அப் செயலிக்கு இணையாக மொபைல் போன்களில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் செயலியாக டெலிகிராம் உள்ளது. உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான பயனர்களை கொண்ட டெலிகிராம் நிறுவனத்தின் உரிமையாளர் பாவெல் துரோவ். 40 வயதான இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு மட்டும் 13.9 பில்லியன் டாலராகும்.

telegram-pavel-durov-founder-to-leave-entire-fortune-to-over-100-children

100 குழந்தைகளா என வியப்பு

பாவெல் துரோவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுதி வைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இவரது பேட்டிதான் தற்போது இணைய உலகில் வைரலாக பரவிக் கொண்டு இருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளா? என நெட்டிசன்கள் வியப்புடன் கேட்டு வருகிறார்கள். டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் அளித்த முழு பேட்டியின் விவரத்தை காணலாம்.

விந்தணு தானம்

பிரான்சின் லே பாயிண்ட் இதழுக்கு அளித்த பாவெல் துரோவ் பேட்டி அளித்தார். அப்போதுதான் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். துரொவிற்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலமாக அவருக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறியிருக்கிறார். அது மட்டும் இன்றி கடந்த 15 ஆண்டுகளாக துரோவி விந்தணு தானம் செய்து வருகிறார். இதன் விளைவாக 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இந்த குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளாகவே தான் பாவிப்பதாகவும் எந்த வேறுபாடும் காட்ட மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "என் குழந்தைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் பார்க்க விரும்பவில்லை. இயற்கையாக கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், எனது விந்தணு தானத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அனைவருக்கும் ஒரே உரிமைகள்

அவர்கள் எல்லோரும் எனது குழந்தைகள். அனைவருக்கும் ஒரே உரிமைகள் இருக்கும்" என்றார். இதன் மூலம் தனது பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை 100 க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு பகிர்ந்த அளிக்கும் படி உயிலும் எழுதிவிட்டாராம். அதில் ஒரு ட்விஸ்ட்டும் வைத்து இருக்கிறார். அதாவது, தனது குழந்தைகள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தனது சொத்தை அணுக முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதாவது துரோவ் கூறுகையில், "நான் எனது உயிலை சமீபத்தில் தான் எழுதினேன். இன்று முதல் முப்பது வருடங்கள் முடிந்த பின்னரே எனது குழந்தைகள் எனது சொத்தை பயன்படுத்த முடியும் என்று முடிவு செய்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டார். எதற்காக இப்படி எழுதி வைத்தார் என்பது குறித்த எந்த விவரத்தையும் அவர் பகிரவில்லை.

டீ, காபி குடிப்பதில்லை

துரோவ் தனது லைஃப் ஸ்டைலிலும் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றுபவராக அறியப்படுகிறார். இது குறித்து தனது டெலிகிராம் பாலோயர்களிடம் அடிக்கடி அவர் உரையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். தினமும் 300 புஷ் அப்கள், 300 ஸ்குவாட்கள் செய்வதாகவும் கூறியிருக்கும் துரோவ், மது, காபி, டீ போன்றவற்றை அருந்துவதையும் தவிர்த்து வருவதாக கூறியிருக்கிறார்.

துரோவ் பல்வேறு சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறார். டெலிகிராம் செயலி குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அண்மையில் கைது செய்யப்பட்டும் இருந்தார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டை துரோவ் மறுத்து இருந்தார். இப்படி சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவராக அறியப்படும் துரோவ் தற்போது தனது சொத்தை பிள்ளைகளுக்கு எழுதி வைப்பதிலும் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு பேசுபொருளாகியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+