அமெரிக்காவில் விசா பெற இப்படி செய்யாதீங்க.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! உஷார் மக்களே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா மோசடியில் இந்தியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இந்த விஷயத்தில் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்க வெளிநாட்டினர் தொடர்ந்து, சட்டவிரோத செயல்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் கண்டறியப்படும்போது, அது பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.

U-Visa
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 10 பேர், அந்நாட்டின் விசா விதிமுறைகளை தவறாக பயன்படுத்தி சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்கள் U-visaவை பெற முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியர்கள் மீதான கண்ணோட்டம் அமெரிக்காவில் மாறியிருக்கிறது.
என்ன நடந்தது?
அமெரிக்காவில் U-visa என்று ஒரு வகை இருக்கிறது. இந்நாட்டு சட்டப்படி, கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டு, காவல்துறையின் விசாரணைக்கு உதவுபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். அதாவது சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நுழைந்து கொள்ளையடிக்கிறது எனில், கடைக்குள் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படிருந்து, கொள்ளை கும்பலை பிடிக்க உதவுகிறார்கள் எனில் அவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும்.
10 இந்தியர்கள்
ஆனால், சிலர் விசாவை பெறுவதற்காக போலியான கொள்ளை நாடகத்தை அரங்கேற்றுவார்கள். தங்களை பாதிக்கப்பட்டவர்களை போல காட்டிக்கொண்டு விசாவை பெறுவார்கள். அப்படித்தான் இந்த 10 இந்தியர்களும் போலியான நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். விசாரணை இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்கள் மீது கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் ஃபெடரல் கிராண்ட ஜூரி, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறார்.
இந்தியர்களே உஷார்
இதன் பின்னர் விசாரணை விரிவாக நடைபெறும். இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் இவர்களுக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம். மட்டுமல்லாது இவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தங்கள் விசா காலாவதியாகிவிட்டது எனில், அதை புதுப்பிக்க உரிய முறையில் முயற்சிக்க வேண்டுமே தவிர, சட்டவிரோத வழிகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications