நிலநடுக்கத்தால் நள்ளிரவில் குலுங்கிய அந்தமான்.. இரண்டு வாரங்களில் 3-வது சம்பவம்.. அச்சத்தில் மக்கள்
வாஷிங்டன்: அந்தமானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்திய பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது அந்தமான் நிகோபார். யூனியன் பிரதேசமான அந்தமானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாத துவக்கத்தில் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. நள்ளிரவு 2.56 மணியளவில் அதிர்வுகள் உணரப்பட்டதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த மாதம் 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இதனால் கடந்த 2 வாரங்களில் 3வது முறையாக அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications