மொத்தமாக ஏமாந்த டிரம்ப்.. நோபல் பரிசு கிடைக்காததால் புலம்பி தள்ளிய வெள்ளை மாளிகை.. அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்த அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் மரியா கோரினா மச்சாதோ இந்த பரிசை வென்றார். இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் ஏமாற்றமடைந்தார். இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 8 போரை நிறுத்திவிட்டேன். எனக்கு தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று கூறி வந்த டிரம்ப் கவலையடைந்துள்ளார். இந்நிலையில் தான் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்காததால் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் நோபல் பரிசு கமிட்டியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டின் சயின்டிஸ்ட் ஆல்ஃபிரட் நோபலின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நோபல் பரிசு மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படும்.

the-nobel-committee-proved-they-placed-politics-over-peace-says-white-house-communication-chief-af

அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோரை பாராட்டும் வகையில் நோபல் பரிசு என்பது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஐந்தாம் நாளான இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கோரினா மச்சாதோவுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆவார்.

இவருக்கு 58 வயது ஆகிறது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவால் முறைகேடு செய்து தேர்தலில் வென்றதாக கூறி வருகிறார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு பிறகு அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் வெனிசுலாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டு வருகிறார். 2025ம் ஆண்டில் டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.

மிரட்டல், அச்சுறுத்தல், பயண தடைகள், சிறைவாசம் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டாலும் அவர் வெனிசுலாவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அயராது போராடி வருகிறார். சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தை கொண்டு வரும் வகையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில் போன் காலில் நோபல் பரிசு வென்றது பற்றி விளக்கப்பட்டது.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 8 போரை நிறுத்திவிட்டேன். அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்.. வேண்டும் என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை கடந்த 2009ம் ஆண்டு பெற்றார்.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற அடுத்த சில மாதங்களிலேயே அந்த பரிசை வென்றார். இதனால் டிரம்பும், எப்படியாவது நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.

இந்நிலையில் தான் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்காததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக இருக்கும் ஸ்டீவன் சியுங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு மனிதர்களின் உயிரை காக்கும் வகையில் போர்களை முடிவுக்கு கொண்டு வருவார். அவரது மனது மனிநேயத்துக்கானதாக உள்ளது. அவருக்கும் இருக்கும் சக்தியால் மலைகளை கூட நகர்த்துவார். அவரை போல் யாரும் இருக்க முடியாது. தற்போது நோபல் கமிட்டி அமைதியின் மீதுஅரசியல் செய்ததை நிரூபித்துள்ளது'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் தேர்வுக்குழு அரசியல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அதேபோல் டிரம்ப் உடன் இருக்கும் நட்பின் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டவர்கள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்காததால் அந்த தலைவர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+