கூண்டை திறந்து விட்ட எலான் மஸ்க்! சுதந்திர பறவையான ‘ட்விட்டர்’ குருவி! என்ன தான் சொல்ல வர்றாருங்க..!
வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவரான எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ள ட்விட் ஆனது சமூக ஊடகங்களில் மீண்டும் பலத்த விவாதங்களைக் தூண்டியுள்ளது. எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் புகைப்படம் ஒன்றில் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ட்விட்டர் குருவியை அவர் திறந்து விடுவது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது.
Recommended Video
ஸ்பேஸ் எக்ஸ், டெல்ஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவன தலைவரும், தற்போதைய நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தனது பார்வையை உலக அளவில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் பக்கம் திருப்பினார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் எடுத்த அதிரடி முடிவுதான் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றுவது.

எலான் மஸ்க் அதிரடி
சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ட்விட்டர் ப்ளு, ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள், கருத்துரிமை, எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்தனர். ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் மஸ்க் வாங்கிக்கொள்ள ட்விட்டர் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துவிட்டது.

ட்விட்டரில் போலி கணக்குகள்
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ட்விட்டரில் போலி கணக்குகள் ஏராளமாக இருப்பதாகவும், இதனால் அந்நிறுவனத்தை வாங்கும் முடிவில் சற்று பின்வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக ட்விட்டரைக் கைப்பற்றிய பிறகு, அதில் பிரதானமாக மூன்று மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகச் சொல்லிவருகிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் கருத்துரிமை பேணப்படவில்லை என்பது மஸ்க்கின் முதன்மையான குற்றச்சாட்டு.

புதிய சீர்திருத்தங்கள்
அந்த வகையில் டொனால்டு ட்ரம்ப் போன்றவர்களின் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ட்விட்டர் பயனர்களுக்கு எந்தெந்த ட்வீட்களை முன்னிலைப்படுத்திக் காண்பிப்பது என்பதை முடிவுசெய்யும் அல்காரிதங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, ஃபேஸ்புக் பதிவுகளுக்கு இருப்பதுபோல் ட்வீட்களைத் திருத்துவதற்கான எடிட்டிங் வசதி, உண்மையான நபர்கள் மூலம் அல்லாமல் மென்பொருள் மூலம் இயக்கப்படும் ட்விட்டர் பாட் கணக்குகளை நீக்குவது, பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவந்த நீல டிக் அங்கீகாரத்தைத் தனிநபர்களால் இயக்கப்படும் அனைத்து ட்விட்டர் கணக்குகளுக்கும் அளிப்பது உள்ளிட்ட பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

புதிய ட்விட்
இந்நிலையில் தான் இன்று எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட் ஆனது சமூக ஊடகங்களில் மீண்டும் பலத்த விவாதங்களைக் தூண்டியுள்ளது. எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் புகைப்படம் ஒன்றில் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ட்விட்டர் குருவியை எலான் மஸ்க் திறந்து விடுவது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. அதாவது பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் இந்த ட்விட்டர் நிறுவனத்திற்கு தான் சுதந்திரம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் வகையில் இதனை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலான் மஸ்க்-ன் இந்தப் பதிவை லட்சக்கணக்கானோர் லைக் செய்ததோடு ரீட்வீட் செய்து வருகின்றனர். மேலும் முடங்கிக் கிடந்த ட்விட்டருக்கு சுதந்திரத்தை அளித்து வருகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications