திருடன் பார்த்த வேலை! வங்கி அட்டையை இழந்தவருக்கு கிடைத்த பல கோடி ஆஃபர்! பிரான்சில் சுவாரசிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: திருடிய வங்கி அட்டையில் இருந்து இரண்டு திருடர்கள் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு இந்திய மதிப்பில் சுமார் 4.53 கோடி பரிசாக அடித்து இருக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக தற்போது இந்த பணத்தை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்களாம். இதற்கிடையே, வங்கி அட்டையை பறிகொடுத்தவர் பரிசுத்தொகையை பாதியாக பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து இருக்கிறார். பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த சுவாரசிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருடனிடம் பொருட்களை பறிகொடுத்தவர்கள் இழந்த பொருட்களை நினைத்து நிம்மதி இன்றி இருப்பார்கள். ஆனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அப்படியே தலைகீழாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருடன் தன்னிடம் இருந்த வங்கி அட்டையை திருடியதால் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். வங்கி அட்டை திருடு போய்விட்டதே என வருத்தத்தில் இருந்த அந்த நபருக்கு ஒரே நாளில் அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. இந்த சுவாரசிய சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Lottery France Trend

பிரன்ஸை சேர்ந்தவர் ஜீன் டேவிட் இ. பிரான்சில் உள்ள தெற்கு நகரமான டூலோஸ் நகருக்கு இவர் காரில் சென்றிருந்தார். வங்கி அட்டைகள் உள்பட உடமைகள் அடங்கிய பையை காரின் பின்பக்கம் வைத்து இருந்து இருக்கிறார். காரை பார்க் செய்துவிட்டு திரும்பிய போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது காரில் இருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கிறர்கள்.

இதனால் வேதனை அடைந்த ஜீன் டேவிட் இ உடனடியாக அதில் இருந்த வங்கி அட்டையை பிளாக் செய்ய, அக்கவுண்ட் வைத்து இருக்கும் வங்கிக்கு கால் செய்து இருக்கிறார். அதற்குள் அந்த அட்டையை வைத்து லோக்கல் ஷாப் ஒன்றில் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு பொருட்களை வாங்க முடியாத அளவுக்கு உடனடியாக வங்கி அட்டையை ஜீன் டேவிட் முடக்கிவிட்டாலும், தனது கார்டை வைத்து என்ன பொருள் வாங்கியிருப்பானோ அந்த திருடன் என நினைத்தபடி ஜான் டேவிட் இ உடனடியாக காவல் நிலையத்திலும் புகாரளித்துள்ளார்.

அப்போது நடந்த விசாரணையில், ஜான் டேவிட் இ கார்டில் இருந்து இரண்டு திருடர்கள் ஸ்கராட்ச் லாட்டரி வாங்கியதும் அந்த டிக்கெட்டிற்கு 500,000 யூரோக்கள் பரிசு விழுந்து இருந்ததும் தெரிந்துள்ளது. ஆனால் பரிசை வாங்கினால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த திருடர்கள் தலைமறைவு ஆகிவிட்டார்களாம். இதனால், திருடர்களுக்கு பெரிய ஆஃபர் ஒன்றை ஜான் டேவிட் இ போட்டு இருக்கிறார்.

அதாவது பரிசுத்தொகையை பாதியாக பிரித்துக்கொள்ளலாம் என்றும் தன்னிடம் இருந்து திருடிய வாலெட்டையும் திருப்பி தரவேண்டும் என டீல் பேசியிருக்கிறார். ஆனாலும் கைதுக்கு பயந்து வெளியே தலைகாட்டாமல் திருடர்கள் இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள். தற்போது லாட்டரியில் பணம் அடித்ததை நினைத்து சந்தோஷப்படுவதா? அல்லது திருடர்களின் செயலை நினைத்து வேதனைப்படுவதா? என குழப்பத்தில் இருக்கிறார் ஜீன் டேவிட் இ....

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக இதற்கு கருத்துக்களை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. உண்மையில் இதில் அதிர்ஷ்டக்காரர் அந்த திருடர்களா.. அல்லது பர்சை இழந்தவரா? என்பதை கண்டுபிடிக்கவே தனி ஆய்வு நடத்தனும் போல் இருக்கே என நெட்டிசன் ஒருவர் கூறியிருக்கிறார். அதேபோல, திருடர்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் வந்து இருக்கிறது என மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+