அமெரிக்காவில் மீண்டும் செயல்படும் டிக்டாக்.. ஒரே நாளில் நடந்த மாற்றம்.. அதிபர் டிரம்புக்கு நன்றி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டில் டிக்டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்ட் டிரம்ப்-க்கு நன்றி கூறியுள்ள டிக்டாக் நிறுவனம், நீண்ட கால தீர்வுக்கு டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ்-க்கு முன்பாக பலரும் டிக்டாக் செயலியை தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் டிக் டாக் செயலியின் சேவை நிறுத்தப்பட்டது. இதன்பின்னரே ரீல்ஸ் பயன்பாடு அதிகரித்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் டிக்டாக் செயலி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
அதுமட்டுமல்லாமல் டிக்டாக் செயலியை அமெரிக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முற்றிலும் மறுத்து வந்தது. இதனால் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் போவதில்லை என்று பைட் டான்ஸ் நிறுவனம் கூறியது.
அப்போது டிக்டாக் செயலிக்கு தடை உறுதி என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து பைட் டான்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்த நிலையில், எந்த தடையும் நீக்கப்படவில்லை. இதனையடுத்து அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. ஆனால் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து பைட் டான்ஸ் நிறுவனம் தரப்பில், டிக்டாக் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை அளித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி. டிக்டாக்கை அமெரிக்காவில் நீண்ட காலம் செயல்பட தேவையான தீர்வுக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை 90 நாட்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications