துரத்தும் "துரதிர்ஷ்டம்.." மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண அழைத்து சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்
வாஷிங்டன்: டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் இப்போது திடீரென மாயமாகியுள்ளது.
Recommended Video
மனிதர்கள் நீண்ட தூரம், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று வணிகம் செய்ய முதலில் பயன்படுத்தியது என்னவோ கப்பல்களைத் தான். விலை குறைவு தொடங்கிப் பல காரணங்களால் இன்றும் உலக வணிகத்தைக் கப்பல்களே தீர்மானம் செய்கிறது.
நாம் கப்பல்களில் பயணிக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பல ஆயிரம் கப்பல்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மூழ்கியுள்ளன. ஆனால், பலருக்கும் கப்பல் என்றாலே முதலில் டைட்டானிக் கப்பலே நினைவுக்கு வரும்.

டைட்டானிக்: குறிப்பாக ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை எடுத்த பிறகு, அது டைட்டானிக் புகழை அப்படியே வைத்திருக்க உதவியது.. அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிச் சிதிலமடைந்து கிடக்கும் பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தான் அது அங்கே இருந்த பனிப்பாறைகளில் மோதி விபத்தில் சிக்கியதைக் கண்டுபிடித்தனர்.
ஆய்வுப் பணிகள் ஒரு பக்கம் நடக்கும் அதேநேரத்தில் நீருக்கு அடியே இருக்கும் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். நேற்றைய தினம் இந்தக் கப்பல் வழக்கம் போலக் கிளம்பிய நிலையில், அது மாயமானதாகக் கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் கிளம்பிய 30 நிமிடத்தில் கன்ட்டிரோல் ஸ்டேஷன் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: இதையடுத்து நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கிறது. இதனால் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றித் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நீர் மூழ்கிக் கப்பல் மொத்தம் 5 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் உயிருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் தெரியவில்லை.
டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின் போது கடந்த 1912 ஏப்ரல் 15ஆம் தேதி பனிப்பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. அந்த மோசமான விபத்தில் சுமார் 1500 பயணிகள் உயிரிழந்தனர். டைட்டானிக் மூழ்கிய இடம் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது.

ஆய்வாளர்கள்: 1985 ஆம் ஆண்டில் அந்த மூழ்கிய இடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பல ஆண்டுகள் ஆனாலும் அங்கே கப்பலின் பகுதிகள் இருந்தன. அதைத் தொடர்ந்து கப்பலில் விபத்து எப்படி நிகழ்ந்தது, அது பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது எப்படி என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே கப்பல் எப்படி மூழ்கியிருக்கலாம் என்பதைக் கண்டறிந்தனர். கடந்த மே மாதம் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் தொடர்பான முழு 3டி படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி 110 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட நிலையில், இன்னும் அதன் துரதிஷ்டம் தொடர்கிறது. நீரில் மூழ்கிக் கிடக்கும் அதன் இடிபாடுகளைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது. உள்ளே இருந்தவர்களுக்கு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவாக நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications