"டிரஸை எல்லாம் கழட்டி.." நள்ளிரவில் பொண்ணு பக்கத்துல.. எல்லை மீறிய டாப் அதிகாரி! கடைசியில் ட்விஸ்ட்
வாஷிங்டன்: பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த டாப் அதிகாரி செய்துள்ள செயலை பார்த்து போலீசாரே மிரண்டு போய்விட்டார்கள்.
இங்குப் பலருக்கும் மது குடித்தால் எப்போது எதைச் செய்கிறோம் என்றே தெரியாது. மது குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அலம்பலைக் கட்டுப்படுத்தவே முடியாது.
இதன் காரணமாகவே மது குடிப்பவர்களைக் காட்டிலும் அவர்களுடன் இருப்பவர்களே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை கண்டிப்பாக எல்லை மீறிவிடும்.

அமெரிக்கா
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இறைச்சி நிறுவனத்தின் டாப் அதிகாரி செய்த செயல் தான் அங்குள்ள போலீசாரை மிரளச் செய்துள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய இறைச்சி நிறுவனமான டைசனின் தலைமை நிதி அதிகாரி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு உள்ளார். யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணின் படுக்கையிலேயே தூங்கியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டைசன் டாப் அதிகாரி
டைசன் ஃபுட்ஸின் சிஎஃப்ஓ ஜான் ஆர் டைசன் தான் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை டைசன் நிறுவனத்தைத் தோற்றுவித்த டைசனின் கொள்ளுப்பேரன் ஆவார்.. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரின் வீட்டில் இருந்து ஃபோன் கால் வந்துள்ளது. அதாவது யார் என்றே தெரியாத ஒருவர் தனது வீட்டில் பெட்டில் கிடப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

ஆடைகளைக் கழட்டி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ஜான் ஆர் டைசன் தான் இப்படி இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் அவர் ஆடைகளை எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு இப்படிப் படுத்துக் கிடந்து உள்ளார். அங்கு வந்த போலீசார் 32 வயதான டைசனை எழுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், அவரால் பதில் கூற முடியவில்லை. அவரை எழுப்பி உட்கார வைக்க முயன்ற போதும், அவர் மீண்டும் மீண்டும் படுக்கையில் விழுந்துள்ளார்.

மது போதை
அவரிடம் இருந்து மிகக் கடுமையான மது வாசம் அடித்துள்ளது. அதாவது முந்தைய நாள் இரவில் பயங்கரமாக மது எடுத்துக் கொண்ட டைசன் தனது வீடு என நினைத்து வீடு மாறி இந்த வீட்டில் புகுந்துள்ளார். தனது வீடு என நினைத்துக் கொண்டதால் ஆடைகளைக் கலைந்து கீழே போட்ட அவர், படுக்கையிலும் படுத்துவிட்டார். அந்த பெண்ணும் இவை எல்லாம் நடந்த போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை.

பதறிய பெண்
காலை நேரத்தில் தான் தனது அருகே யாரோ தெரியாத நபர், அதுவும் ஆடைகள் இல்லாமல் இருந்ததால் பதறியடித்துக் கொண்டு போலீசாருக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து, போதையில் இருந்த டைசனை கைது செய்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தனிப்பட்ட விஷயம் என்று கூறி டைசன் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டது.

மன்னிப்பு
இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ஜான் ஆர் டைசன் இந்த விவகாரத்துக்கும் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், குடிப் பழக்கம் தொடர்பாக கவுன்சிலிங் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் மோசமான விஷயத்தைச் செய்துள்ளேன். இது எங்கள் நிறுவனத்தின் மதிப்புகளைப் பாதிக்கிறது. இது மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனது செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications