மனித குல வரலாற்றில்... மாபெரும் சாதனை... செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய விண்கலத்தில் இருந்த ஹெலிகாப்டர் தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா, அங்கு எதாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.
இது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அங்கு அது ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

அமெரிக்க விண்கலம்
தற்போது அங்கிருக்கும் மண் துகள்களின் மாதிரிகளையும் பாறைகள் மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் விண்கலம் சேகரித்து வருகிறது. அந்த விண்கலத்துடன் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர்
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த ஹெலிகாப்டரை பறக்க வைக்க நாசா திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அந்தத் திட்டத்தை நாசா தள்ளி வைத்தது. இந்நிலையில், தற்போது அந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மனித குல வரலாற்றில் பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல்முறையாகும்.

அடுத்த மைல்கல்
இந்த மாபெரும் சாதனை குறித்து நாசா JPL தனது ட்விட்டரில், "செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சுமார் 421 மில்லியன் கிலோமீட்டர் பயணித்த அந்த விண்கலத்தின் பயணம் இதன் மூலம் முடிந்துள்ளது. இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரைச் சமாளிப்பதே அதன் அடுத்த மைல்கல்லாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

வெப்ப நிலை
அந்த ஹெலிகாப்டர் வரும் நாட்களில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இருப்பினும், அந்த ஹெலிகாப்டருக்கு பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது. ஏனென்றால், செவ்வாய் கிரகத்தில் இரவு நேரங்களில் -90 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும். அந்த கடும் குளிரை சமாளித்து தன்னை தானே ஹெலிகாப்டர் சூடாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஹெலிகாப்டர் சோல் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications