கண்ணுக்கு தெரியாத எதிரியை பரப்பிய சீனா.. நரகத்தை நோக்கி 184 நாடுகள்.. நஷ்ட ஈடு கோரும் டிரம்ப்
வாஷிங்டன்: ஆரம்பத்திலேயே கொரோனாவை கட்டுப்படுத்த சீனா தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,35,765 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 59,266 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 25,409 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,42,238 ஆகும்.
அதாவது அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியது. 184 நாடுகள் முழுவதிலும் 3 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் அமெரிக்காவில் 1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
உலகில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 58 ஆயிரம் பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இது வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை காட்டிலும் அதிகம் ஆவர். நாள்தோறும் சராசரியாக 2000 பேர் அமெரிக்காவில் இறக்கின்றனர். கடந்த 18 நாட்களுக்குள் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. அதாவது இரட்டிப்பாகிவிட்டது.

184 நாடுகள்
நியூயார்க், மெக்சிகன், கலிபோர்னியா, இலினாய்ஸ், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் கொரோனா அதிகம் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே சீனா கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் 184 நாடுகளும் நரகத்தை நோக்கி செல்கின்றன.

கொரோனா வைரஸ் பரவியது
உற்பத்தி மற்றும் தாது பொருட்களுக்கு சீனாவை நம்பியிருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் தெரிவிக்கின்றனர். கண்ணுக்குப் புலப்படாத எதிரியான கொரோனாவை உலகம் முழுவதும் சீனா ஏவிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இழப்பீடு
சீனாவின் செயலால் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. இதை அந்த நாடு முன் கூட்டியே, வேகமாக தடுத்திருக்க வேண்டும். உலக நாடுகளுக்கு பரவும் வரை விட்டிருக்கக் கூடாது. சீனாவின் அலட்சியத்திற்காக ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க 165 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஜெர்மனி கேட்டுள்ளது. அதை விட அதிக பணத்தை நாங்கள் இழப்பீடாக கேட்போம். எவ்வளவு இழப்பீடு கேட்கவுள்ளோம் என்பதை இன்னும் மதிப்பிடவில்லை. சீனாவின் பொறுப்பற்ற செயலால் பொருளாதார இழப்பீடு அதிகமாக உள்ளது என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications