அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தேதி முடிந்து 3 நாட்கள் வரை பெனிசில்வேனியா மாகாணத்தில் மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்துள்ளதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரி
வாஷிங்டன்: பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்துள்ளதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக அரியணையில் அமரப்போவது யார் என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும். குடியரசுக்கட்சியா, ஜனநாயகக் கட்சியா அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புடன் பல கோடி அமெரிக்கர்கள் காத்திருக்கின்றனர்.

கொரோனா அச்சத்திற்கு இடையே 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ள நிலையில் இன்றும் பரபரப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசுக்கட்சியின் யானையா? ஜனநாயகக் கட்சியின் கழுதையா? அமெரிக்க அதிபர் ரேஸில் முந்தப்போவது எந்த சின்னம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. ஜோதிடர்களோ சூரியனும், குருவும் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாக கணித்துள்ளனர். இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்தது. இதற்கு தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். 'இதனால் கடும் விளைவுகள் ஏற்படும்' என கோபத்துடன் கூறியிருக்கிறார்.
பெனிசில்வேனியா மாகாணத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுக்குமே கணிசமான வாக்கு சதவிகிதம் இருக்கிறது. ஆனால், சமீபமாக ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட சர்வேயில்கூட ட்ரம்பை விட ஜோ பிடனே முன்னிலையில் இருந்தார். எனவேதான் டிரம்ப் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications