கதறும் US.. அமெரிக்கா செல்லவே யோசிக்கும் வெளிநாட்டினர்.. சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட டிரம்ப்
வாஷிங்டன்: டிரம்ப் அதிபராக வந்த பிறகு வெளிநாட்டினருக்கு, குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களுக்கான, விசா நடைமுறைகளில் டிரம்ப் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் அமெரிக்கா செல்லவே வெளிநாட்டு மாணவர்கள் யோசிக்கிறார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா செல்லத் தயங்குவது அமெரிக்காவைத் தான் மோசமாகப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதலே வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்கள் மட்டுமின்றி சட்டப்பூர்வமாக நாட்டில் நுழைந்தோருக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களுக்கே கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது.

கடும் பாதிப்பு
டிரம்ப் நிர்வாகத்தின் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் இதனால் அந்த நிறுவனங்களின் நிதிநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்குக் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், டிரம்ப் அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் அமெரிக்கா போகவே யோசிக்கும் மாணவர்கள், மற்ற நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் கணிசமான நிதியை இழக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் இருக்கும் சிறு அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏன் முக்கியம்
சர்வதேச மாணவர்கள் வெறும் பன்முகத்தன்மையை மட்டும் வழங்குவதில்லை.. அவர்கள் கல்வி நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளனர். ஏனென்றால் உள்நாட்டு மாணவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும். ஆனால், சர்வதேச மாணவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்துகின்றனர். அதாவது வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் மூலமாகவே அமெரிக்க மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
நிதி வலிமை
இதற்கு அமெரிக்காவில் உள்ள மத்திய மிசூரி பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பல்கலைக்கழகத்திற்குப் பெரிய நிதி வலிமை இல்லை.. கல்விக் கட்டணத்தையே முக்கிய வருவாய் ஆதாரமாக நம்பியிருந்திருந்தது. வெளிநாட்டு மாணவர்கள் தான் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இருந்த நிலையில், விசா கட்டுப்பாடுகளால் அவர்களின் சேர்க்கை பாதியாகக் குறைந்து.. இதனால் இந்த பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது.
அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள், தங்கள் மாணவர் சேர்க்கையில் 20%க்கும் மேல் வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டிருக்கிறது. வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதால் பல்வேறு பல்கலைக்கழகங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.
கடும் சரிவு
டிரம்ப் அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு மாணவர்களின் வருகையைப் பெரிதும் பாதித்துள்ளன. நடப்பாண்டில் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் F-1 விசா ஒப்புதல்கள் 12% சரிந்தன.. அதேபோல மே மாதம் விசா ஒப்புதல் 22% வரை சரிந்தது. இதே நிலைமை சென்றால் கிட்டத்தட்ட 90% வரை மாணவர் விசா கிடைக்காமல் போகலாம் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தச் சரிவு அமெரிக்காவிற்குச் சுமார் $7 பில்லியன் வருவாய் இழப்பையும், 60,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தும். அத்துடன், ஆராய்ச்சி, புதுமை மற்றும் கல்வித் துறைகளில் நாட்டின் நீண்டகாலப் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். இது தொடர்பாக மிசூரி பல்கலைக்கழகத்தின் தலைவர் ரோஜர் பெஸ்ட், "வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறையும்போது, உள்நாட்டு மாணவர்களுக்கு நிதியளிக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.
அமெரிக்காவுக்குத் தான் சிக்கல்
வெளிநாட்டு மாணவர்களின் வருகையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு தற்காலிகமானதல்ல.. டிரம்ப் நிர்வாகம் கெடுபிடிகளைத் தளர்த்தாவிட்டால் நிலைமை மோசமாகும். அமெரிக்காவுக்குப் பதிலாக கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல இந்தியர்கள் விரும்பும் நிலையில், இந்த டிரெண்ட் நீடித்தால் அமெரிக்காவுக்கு அது மேலும் மேலும் சிக்கலையே தரும்.
-
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications