சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பினால் 5% வரி! டிரம்ப் வைக்கும் ஆப்பு.. அமெரிக்க NRIகளுக்கு பெரிய சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியை அமைத்த பிறகு அங்கு வாழும் வெளிநாட்டினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் புதிய சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் பணத்தைத் தாயகம் அனுப்பினால் கூடுதலாக 5% வரி செலுத்த வேண்டும்.
டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு செக் வைக்கும் வகையில் மற்றொரு சட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினரைக் கடுமையாகப் பாதிக்கும்.

புதிய மசோதா
அமெரிக்காவில் குடியுரிமை பெறாதவர்கள் செய்யும் சர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கு 5% வரி விதிக்கப்படும் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினாற் தங்கள் சொந்த நாட்டிற்குப் பணம் அனுப்பும்போது அதற்கு 5% வரி செலுத்த வேண்டும் என்பதே சாரம்சம். அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு வெளிநாட்டினர் வசிக்கும் சூழலில், இந்த மசோதாவால் அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்குப் பணத்தை அனுப்பும் போது கூடுதல் வரியைச் செலுத்தும் சூழலை ஏற்படுத்தும்.
எதற்காக இந்த மசோதா
இந்த மசோதாவில் பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்று இருக்கிறது. 2017ல் டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தை நிரந்தரமாக்குவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது.. அதில் ஒரு பகுதியாகவே வெளிநாட்டினர் பணம் அனுப்பும்போது வரிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ள அதிபர் டிரம்ப், இந்தச் சட்டம் அமெரிக்காவுக்குத் தேவை என்றும் குடியரசுக் கட்சியினரை இதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
வெளிநாட்டினரிடம் இருந்து வசூலிக்கப்படும் 5% வரி மற்ற சலுகைகளுக்கு நிதியளிக்கவும், எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும். இந்த 5% வரி மூலம் அமெரிக்க அரசுக்குப் பல பில்லியன் டாலர் கூட கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் வந்து பல ஆண்டுகளாகக் கடுமையாக வேலை செய்யும் வெளிநாட்டினருக்குக் கூடுதல் சுமையைத் தருவதாகவே இருக்கும்.
NRIகளை எப்படிப் பாதிக்கும்?
NRIகளுக்கு இந்த வரி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் இப்போது வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் பெரும் நாடாக இந்திய இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 83 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. அதில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்தே வருகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும்போது கூடுதலாக 5% வரியை அனுப்ப வேண்டி இருக்கும்.
மேலும், இனி அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பும்போது அது அமெரிக்காவில் வரிகளைக் கண்காணிக்கும் ஐஆர்எஸ் அமைப்பு வழியாகவே செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும்போது, அதில் எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. ஆனால், இந்த கொள்கையை டிரம்ப் நிர்வாகம் மாற்றுகிறது.
எப்போது அமலுக்கு வரும்!
பொதுவாக அமெரிக்காவில் ஒரு சட்டத்தைக் கொண்டு வர நீண்ட பிராசஸ் இருக்கிறது. இதனால் அதிக காலம் ஆகும். ஆனால், இந்த குறிப்பிட்ட மசோதாவை விரைவாகக் கொண்டு வர அமெரிக்க எம்பிக்கள் திட்டமிட்டுள்ளது. வரும் மே 26ம் தேதிக்குள் இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி ஜூலை 4ம் தேதிக்குள் இதைச் சட்டமாகக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வரி அமலுக்கு வந்த உடனே அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர், எப்படிப் பணம் அனுப்பினாலும், 5% கூடுதல் வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
NRIகள் என்ன செய்யலாம்?
வயதான பெற்றோர், உடன் பிறந்தோரின் கல்வி, ரியல் எஸ்டேட் முதலீடு என எதுவாக இருந்தாலும் இனி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டும். வங்கிகள் மற்றும் NRE/NRO கணக்குகள் என எந்த வகையில் பணம் அனுப்பினாலும் கூடுதல் வரி கட்டாயம் செலுத்த வேண்டும். எனவே, பெரிய தொகை அனுப்பத் திட்டமிடும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே பணத்தை அனுப்பவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications