"சர்வதேச ரவுடி".. இப்படியும் ஒரு அதிபரா.. காரித் துப்பும் உலகம்.. கொஞ்சம்கூட கண்டுக்காத டிரம்ப்!

வன்முறையை கட்டவிழ்த்துள்ள டிரம்புக்கு எதிர்ப்புகள் கூடி கொண்டே போகிறது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரு சர்வதேச "ரவுடி"யை இந்த உலகம் இன்று இனம் கண்டுகொண்டிருக்கும்.. இப்படிப்பட்ட தலைமையின் கீழ் இவ்வளவு காலம் அடிபணிந்து கிடந்தோமா என்று வல்லரசு நாட்டு மக்கள் வெட்கத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.. நட்புறவு கொண்ட மற்ற நாட்டு தலைவர்கள் அவமானத்தால் கூனிக்குறுகி கிடக்கின்றனர்.. அந்த அளவுக்கு அராஜக பேர்வழியாக தனது கடைசி நாட்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்..!

மறுபடியும் அதிபராக வர வேண்டும் என்று கனவிலேயே மிதந்தவர் டிரம்ப்.. அந்தக் கனவு பிறகு வெறியாக மாறி விட்டது.. அதனால்தான் ஜார்ஜ் கொலை விவகாரத்தை கூட கண்டுகொள்ளவில்லை.

தனக்கு எதிரான இன எழுச்சி உருவாகிறது என்பதையும் அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. இனவெறியராக மட்டுமே தன்னை முற்றிலும் அடையாளப்படுத்திக் கொண்டார். அதை அமெரிக்க மக்கள் ரசிக்கவில்லை.

 பொருளாதாரம்

பொருளாதாரம்

தொற்று காரணமாக கொத்து கொத்தாக மக்கள் விழுகிறார்களே என்ற உறுத்தலே இல்லாமல், லாக்டவுனை அறிவிக்காமலேயே அமர்க்களம் செய்து வந்தார்.. தன் நாட்டு பொருளாதாரம் விழுந்துவிடக்கூடாது என்பதிலும், நடக்க போகும் அதிபர் தேர்தலை ரத்து செய்துவிடக்கூடாது என்பதிலுமே கவனத்தை செலுத்தினார்.. அதன்படியே தேர்தலும் முடிவானது.. பிடன் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

டிரம்ப்

டிரம்ப்

இங்குதான் டிரம்ப் அதிகம் தவறு செய்தது.. பிடனை ஒரு வேட்பாளராககூட அவர் மதிக்கவில்லை.. பிரச்சாரங்களில் அநியாயத்துக்கு பிடனை அலட்சியம் செய்தார்.. தான் தான் அடுத்த அதிபர் என்ற கர்வம் மண்டைக்குள் இறுக்கமாக ஒட்டிக் கொண்டுவிட்டதுதான் டிரம்பின் முதல் சறுக்கல்.. இதற்கு பிறகு பிடனின் வெற்றியை அவரால் ஒருக்காலும் ஜீரணிக்கவே முடியவில்லை..

மோசடி

மோசடி

தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சொல்லி கொண்டே இருக்கிறார்.. அவர் தொடுத்த அனைத்து மனுக்களையும் கோர்ட் டிஸ்மிஸ் செய்தும் கொஞ்சம்கூட அவர் திருந்தவே இல்லை.. மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகி டிரம்பின் சூழ்ச்சியை மேலும் அப்பட்டமாக்கியது.. அப்போதும் அவர் திருந்தவில்லை.

 அதிக பாசம்

அதிக பாசம்

"டிரம்ப்புக்கு இந்த நாடு மீது அதிக பாசம் இருக்கிறது.. அதற்காகவாவது தன் பிடிவாதத்தை விட்டுவிட வேண்டும், அவர் மனசு மாற வேண்டும், இப்படியெல்லாம் கோபப்படக்கூடாது" என்று பிடன் பலமுறை அட்வைஸ் தந்தும் அதையும் டிரம்ப் உதாசீனப்படுத்திவிட்டார்.. இப்போது அதிபர் பிடன், 20ந்தேதி பதவியேற்க உள்ளதாலும், அதற்கான நேரம் நெருங்கி வருவதாலும் டிரம்புக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் டென்ஷன் எகிறி கொண்டே இருக்கிறது.. புத்தி பேதலித்தும் விட்டது..

 துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

அதனால்தான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.. போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக காவு வாங்கப்பட்டுள்ளது.. இதுவரை இல்லாத ரவுடித்தனத்தில் டிரம்ப் இறங்கியுள்ளார். எந்த ஒரு அதிபருமே இப்படி ஒரு அராஜகத்தை கையில் எடுத்தது இல்லை.. அதேபோல, தேர்தல் முடிவை அமைதியாக ஏற்றுக் கொண்டு அடுத்த அதிபருக்கு அழகாக வழி விட்டதுதான் இதுவரை இருந்த வரலாறு.

 அதிபர்

அதிபர்

முரட்டுத்தனமான அடையாளம் காணப்பட்ட பல அதிபர்கள் கூட அப்படித்தான் நடந்துள்ளனர். ஆனால் டிரம்ப் வந்தது முதலே முரட்டுத்தனத்தை மட்டுமே காட்டியுள்ளார். அவர் யாரையும் மதிப்பதில்லை. அமெரிக்க மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட அதிபராகவும் இவரே இருக்கிறார். இவரது நடத்தை, செயல்பாடுகள் என எதிலுமே ஒரு முதிர்ச்சி இருந்தது இல்லை. இவரை இவரது சொந்தக் கட்சியினரே இகழும் அளவுக்குத்தான் இருந்தார்.

 வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

சர்வதேச அளவிலும் கூட இவர் எந்த நாட்டிலும் நல்ல பெயரைப் பெற்றதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் கொரோனா விவகாரத்தில் இவர் இந்தியாவையே சாடிப் பேசியிருந்தனர். அநாகரீகமாகவும் நடந்து கொண்டவர் டிரம்ப்... இன்று வெள்ளை மாளிகையில் நடந்துள்ள கலவரத்தின் மூல காரணமே டிரம்ப்தான்.

 தலைவர்கள்

தலைவர்கள்

ஒரு ரவுடியை போல் அவர் நடந்து கொண்டிருப்பது அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலக மக்களையும் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு அமெரிக்காவைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டார் டிரம்ப்.. இதை நம் நாட்டு தலைவர்களும் கொஞ்சம் கவனித்து பார்ப்பது அவசியம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+