வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நிதியுதவி மசோதா... கையெழுத்திட டிரம்ப் மறுப்பு... 14 மில்லியன் பேர் பாதிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2.3 டிரில்லியன் டாலர் கொரோனா தொற்றுநோய் உதவி மற்றும் செலவுத் தொகுப்பு மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் கையெழுத்திட மறுத்து விட்டார். இதனால் சுமார் 14 மில்லியன் மக்கள் இந்தசலுகைகளை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க புதிய அதிபராக ஜோ பிடன் வருகிற 20-ம் தேதி பதவியேற்கிறார். ஆனால் அவர் மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி வரும் டிரம்ப் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவை அனைத்திலும் அவர் தோல்வி அடைந்து விட்டார்.

Trump refuses to sign Covid 19 relief aid Bill

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தினமும் லட்சக்கணக்கில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் அடியோடு முடங்கியுள்ளது.பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கர்களுக்கு சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டத்தை அரசு அறிவித்தது.வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவியாக 2.3 டிரில்லியன் டாலர் தொற்றுநோய் உதவி மற்றும் செலவுத் தொகுப்பு மசோதாவுக்கு கடந்த வார இறுதியில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் ஒப்புதல் அளித்தனர்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட மறுத்து விட்டார். இந்த மசோதா இன்றுடன் காலாவதியாகி விடுவதால் சுமார் 14 மில்லியன் மக்கள் இந்தசலுகைகளை இழக்க நேரிடும் என்று தொழிலாளர் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

மக்களுக்கு இதுபோன்ற சொற்பமான நிதியுதவி போதாது. அவர்களுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அரசியால்வாதிகள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி டிரம்ப் இந்த மசோதாவுக்கு கையெழுத்திட மறுத்து விட்டதாக தெரிகிறது.''அரசியல்வாதிகள் 600 டாலர்களை விட மக்களுக்கு 2,000 டாலர்கள் கொடுக்க ஏன் விரும்பவில்லை? ... எங்கள் மக்களுக்கு பணத்தை கொடுங்கள்!'' என்று கிறிஸ்மஸ் தினத்தில் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க புதிய அதிபராக ஜோ பிடன் வருகிற 20-ம் தேதி பதவியேற்கிறார். ஆனால் அவர் மோசடி செய்து வெற்றி பெற்றதாக கூறி வரும் டிரம்ப் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவை அனைத்திலும் அவர் தோல்வி அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President Trump has refused to sign the $ 2.3 trillion Corona epidemic aid and spending package bill in the United States. As a result, about 14 million people are at risk of losing these benefits, according to reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X