"இந்தியாவுக்கு அடுத்த வாரம் கூடுதல் வரி கன்பார்ம்.." திட்டவட்டமாக சொன்ன டிரம்ப் அரசு.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப்பும் அவரது நிர்வாகமும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்தியாவை "வரி மகாராஜா" என்று விமர்சித்துள்ள டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்திய ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் லாப பார்ப்பதாகவும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி நிச்சயம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா அமெரிக்கா உறவு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீராக மேம்பட்டு வந்தது. ஆனால், அதிபர் டிரம்ப் பிறப்பிக்கும் உத்தரவுகளில் இந்த இரு தரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியாவுக்கு 50% வரியை விதித்தார். இது இரு தரப்பு உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trump s Advisor Navarro says additional tariff against India will defiantly come in force next week

அடுத்த வாரம் கூடுதல் வரி

டிரம்ப் வரியில் 25% ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. மீதமுள்ள 25% வரி அடுத்த வாரம், அதாவது வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தேதி அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ, "நிச்சயம் இந்தக் கூடுதல் 25% வரி அமலுக்கு வரும். 2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை மீது மோதலை ஆரம்பிக்கும் முன்பு, இந்தியா கிட்டத்தட்ட ரஷ்ய எண்ணெய் வாங்கவில்லை எனச் சொல்லலாம்.. அப்போது ரஷ்ய எண்ணெய்யைச் சுமார் சதவீதத்திற்கும் குறைவாகவே வாங்கினர். ஆனால் இப்போது அது 35% ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுக்கு ரஷ்ய எண்ணெய் உண்மையில் தேவையில்லை. சுத்திகரிப்பு மூலம் லாபம் பார்க்கும் திட்டம் தான் இது. ரஷ்யாவுக்குச் சாதகமான ஒரு திட்டம் இது என்பதே உண்மை" என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அழுத்தம் இருந்தாலும் இந்தியா ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்கும் எனத் தகவல் வெளியான நிலையில், இது கருத்துகளை அவர் சொல்லியிருக்கிறார்.

ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்குத் தேவையில்லை

நவேரா மேலும் பேசுகையில், "இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்யா கச்சா எண்ணெய் தேவை என்று சொல்வதே அர்த்தமற்றது . மோடி ஒரு சிறந்த தலைவர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.. தயவுசெய்து உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பதைப் பாருங்கள். இந்தியா இப்போது செய்வது (ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்குவது) அமைதியை உருவாக்கவில்லை, அது போரைத் தொடர காரணமாக இருக்கிறது.

இந்தியா லாபம் பார்க்கிறது

இந்தியா குறைந்த விலையில் ரஷ்யக் கச்சா எண்ணெய்யைப் பெற்று, அதைச் சுத்திகரித்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அதிக விலைக்கு விற்கிறது. இது முழுக்க முழுக்க லாபத்திற்காக மட்டுமே செய்யப்படுகிறது. அடுத்து வரி.. இந்தியாவுடனான வர்த்தகத்தால் அமெரிக்கர்களுக்குத் தான் பாதிப்பு. அவர்கள் வரிகளில் மகாராஜாக்களாக உள்ளனர். இந்தியாவின் அதிக வர்த்தகத் தடைகள், வர்த்தகப் பற்றாக்குறை போன்றவை அமெரிக்கத் தொழிலாளர்களையும் அமெரிக்க பிஸ்னஸ்களையும் பாதிக்கின்றன

அமெரிக்கா உடனான பிஸ்னஸில் இருந்து பெறும் பணத்தை அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்கப் பயன்படுத்துகிறார்கள்.. அதை இந்திய ஆலைகள் சுத்திகரித்து விற்பனை செய்கிறது.. ரஷ்யா அந்தப் பணத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும், உக்ரைன் மக்களைக் கொல்லவும் பயன்படுத்துகிறது.. எனவே, உக்ரைன் போரில் இந்தியாவுக்குப் பங்கு இல்லை என்பதை ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

உண்மை என்ன?

உக்ரைன் போருக்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த அளவே கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்தே அதிக எண்ணெய் வாங்கியது. ஆனால், மோதல் தொடங்கியவுடன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா எண்ணெய்யைப் புறக்கணித்துவிட்டு மத்தியக் கிழக்கு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கின. இதனால் இந்தியா வேறு வழியில்லாமல் ரஷ்ய எண்ணெய்யை வாங்கியது. இப்போது இந்தியா ரஷ்ய எண்ணெய்யைப் புறக்கணித்தால் அது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குக் காரணமாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+