ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பல லட்சம் லாபம்!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய மசோதா காரணமாக 45 லட்சம் இந்தியவர்கள் பயனடைவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மசோதாவில் முன்னதாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பிக் பியூட்டிஃபுல் பில் எனப்படும் செலவின குறைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வாரம் தொடக்கத்தில் செலவின குறைப்பு மசோதா விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் இருந்தன.

நிறைவேறிய மசோதா
இறுதியாக மசோதாவுக்கு 51 பேர் ஆதரவு தெரிவித்தனர். தற்போது அந்த செலவின குறைப்பு மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மிகப்பெரிய பலனை அடைவார்கள். இந்த மசோதாவில் முன்னதாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
1 சதவிகிதம்
ஆனால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அமெரிக்காவில் உள்ள 45 லட்சம் இந்தியர்கள் மிகப்பெரிய பயனடைவார்கள். இந்த திருத்தம் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஹெச்1பி மற்றும் ஹெச் 2ஏ விசா வைத்திருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள்
அமெரிக்காவின் ஐடி துறையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் இந்தியாவில் உள்ள பல்வேறு குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அதற்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால், பலரும் கவலை தெரிவித்து வந்தனர். தற்போது 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருப்பதால், நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மகிழ்ச்சி
2023-24 ஆண்டில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மூலமாக 129 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 28 சதவிகிதம் பணம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிதி மூலமாகவே பல்வேறு குடும்பங்கள் தங்களின் அன்றாட செலவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications