"பிளாக் மண்டே.." டிரம்ப் பற்ற வைத்த பேரழிவு.. நாளை வரலாறு காணாத அளவுக்கு ஏற்படப்போகும் பேராபத்து
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் கடந்த வாரம் உலக நாடுகள் மீது அறிவித்த வரிகள் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிந்து வருகிறது. ஆனால், நாளை திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் மேலும் வரலாறு காணாத அளவுக்குச் சரிய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ரியல் சுதந்திர தினம் என சொல்லிக் கொண்டு டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரிகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அமெரிக்காவிலும் இதன் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது.

டிரம்ப்
கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் பங்குச்சந்தை முடிந்தவுடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் வரி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். டிரம்ப் அறிவிப்பு வந்த உடனேயே சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் ஷேர் மார்க்கெட் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அமெரிக்காவிலும் கூட அடுத்த இரு நாட்கள் ஷேர் மார்க்கெட் தாறுமாறாகச் சரிந்தது.
பிளாக் மண்டே
இதற்கிடையே டிரம்ப் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவில்லை என்றால் 1987ம் ஆண்டு ஏற்பட்ட பிளாக் மண்டே (Black Monday) போன்ற சம்பவம் மீண்டும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். அதாவது கடந்த 1987ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடுமையாகச் சரிந்தன. அதில் அமெரிக்காவும் தப்பவில்லை. பல்வேறு காரணங்களால் அந்த சரிவு ஏற்பட்டது. இந்த முறை டிரம்ப் மீண்டும் அதேபோன்ற ஒரு சரிவை ஆரம்பிப்பார் என்று அமெரிக்கப் பொருளாதார வல்லுநர் ஜிம் க்ரேமர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகள் காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கும்.. பொருளாதார வளர்ச்சியைக் குறையும் என்ற அச்சத்தால் இது நிகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அடுத்த நடவடிக்கை என்னவென்பதை பொறுத்தே பங்குச்சந்தைகள் இருக்கும் என்றும் ஜிம் க்ரேமர் எச்சரித்துள்ளார்.
பெரிய தேசம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கடந்த சில நாட்களில் டிரம்ப் மிகப் பெரிய தேசத்தைச் செய்துவிட்டார். அதைச் சரி செய்ய அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அதிபர் டிரம்ப் பிடிவாதமாக எதுவும் செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் அழிவை நம்மால் தடுக்கவே முடியாது.
முறையாக வர்த்தகம் செய்யும் நாடுகளுடன் டிரம்ப் இணக்கமான உறவை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் 1987ம் ஆண்டு ஏற்பட்ட சூழலே மீண்டும் ஏற்படும். அப்போது இதேபோலத் தான் முந்தைய நாட்கள் தொடர்ந்து 3 நாள் சரிந்த பங்குச்சந்தை, திங்கள்கிழமை (1987 அக்டோபர் 19) ஒரே நாளில் 22 சதவீதம் சரிந்தது. அந்த நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
நாளையே ஏற்படலாம்
டிரம்ப் நடவடிக்கையால் பாதிப்பு சீக்கிரம் ஏற்படும். இதற்கு நாம் அதிக நேரம் காத்திருக்கத் தேவையிருக்காது. நாளை திங்கள்கிழமையே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. டிரம்ப் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றார் மீண்டும் ஒரு பிளாக் மண்டே ஏற்படும்" என்றார். அதாவது பங்குச்சந்தை தொடர்ந்து சரியும் நிலையில், நாளை அது மிக மோசமாகச் சரிய வாய்ப்பு இருப்பதாக ஜிம் கரேமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு ஏன் சிக்கல்
அமெரிக்கப் பங்குச்சந்தை தானே சரியும் என ஜிம் க்ரேமர் கூறியிருக்கிறார். இந்தியாவுக்குப் பாதிப்பு இருக்காது தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உலகமயமாக்கல், சர்வதேச வர்த்தகம், அந்நிய செலாவணியாக டாலர் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இப்போது உலக சந்தையே ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கிறது. அமெரிக்கப் பங்குச்சந்தை சரிந்தால் அது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பங்குச்சந்தையிலும் மிகப் பெரியளவில் எதிரொலிக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications