டிரம்ப் போட்ட குண்டு! அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு விஷயம் நடந்ததே இல்லை.. பயங்கரமா குழப்புகிறாரே
வாஷிங்டன்: அமெரிக்க விதிகளின்படி ஒருவர் அதிகபட்சம் இருமுறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். இப்போது 2வது முறையாக அதிபராக இருக்கும் டிரம்ப், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் யோசனை இருப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். டிரம்ப் இப்படிச் சொல்லக் காரணம் என்ன.. அமெரிக்க விதிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக இப்போது டிரம்ப் இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவிக்கு வந்த டிரம்ப்பின் பதவிக்காலம் 2028ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்காவில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதால் இதோடு டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்றே பலரும் கருதினர்.

டிரம்ப் சர்ச்சை
இதற்கிடையே டிரம்ப் இப்போது கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. அதாவது 2028ல் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னாள் வெள்ளை மாளிகை ஊழியர் நிபுணர் ஸ்டீவ் பனான் தான் இந்த யோசனையை முதலில் முன்வைத்திருந்தார். டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக வேண்டும் என்பது போல ஸ்டீவ் கூறியிருந்தார். இது குறித்துக் கேட்டபோது டிரம்ப், "மீண்டும் அதிபராவது குறித்து நானும் யோசித்து வருகிறேன். 3வது முறையாக அதிபராவது என்பது பெஸ்ட் நம்பர் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார். இருப்பினும், அப்போதே சில நொடிகளிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப், "மீண்டும் போட்டியிடுவது பற்றி நான் உண்மையிலேயே சிந்திக்கவில்லை" என்று சமாளித்தார்.
கடும் போட்டி
தனது பதவிக் காலத்திற்குப் பிறகு குடியரசுக் கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கும் டிரம்ப் வெளிப்படையாகப் பதிலளித்தார். தனது பதவிக் காலத்திற்குப் பிறகு, 2028 அதிபர் தேர்தல் ரேஸில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இடையே தான் போட்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மேலும் பேசுகையில், "எங்கள் டீமிலேயே சில நல்ல நபர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் சிறந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. வான்ஸ் மிகச் சிறந்த துணை அதிபர் என்பதில் சந்தேகமே இல்லை. என்னைப் பொறுத்தவரை ரூபியோ அல்லது வான்ஸ் இடையே தான் அடுத்து போட்டி இருக்கும். ஆனால், இருவரும் அதிபர் ரேஸில் போட்டியிடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்றார்.
அதிர்ச்சி கொடுத்தார்
வெள்ளை மாளிகை மாஜி ஊழியர் ஸ்டீவ் பனான், டிரம்ப்புடன் நெருக்கமாக இருந்தவர். அவர்தான் டிரம்ப் மீண்டும் ஒரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்காக டிரம்ப்பிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும் ஸ்டீவ் குறிப்பிட்டார். அது குறித்த கேள்விக்கே டிரம்ப் இப்படிச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அமெரிக்க விதிகள் சொல்வது என்ன
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் இரு முறை மட்டுமே அதிபராக இருந்தார். அதன் பிறகு தேர்தலில் தோல்வி அடையவில்லை என்ற போதிலும், ஓய்வு பெற்றுவிட்டார். அவரை தொடர்ந்து அதிபராகப் பதவியேற்றவர்களும் கூட 2 முறை மட்டும் அதிபராக இருந்தனர். இது அங்கு ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்தது. ஆனால், 1940களில் இந்த மரபை பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் உடைத்தார்.. 1940ல் முதலில் அதிபரான ரூஸ்வெல்ட் 4 முறை தொடர்ச்சியாக அதிபர் தேர்தலில் வென்றார். அப்போது அதிபர் பதவியில் இருக்கும்போதே அவர் உயிரிழந்தார்.
இதுபோல ஒருவரே அதிபர் பதவியில் தொடர்ந்தால் அது சர்வாதிகாரம் அல்லது அதிகாரக் குவிப்புக்கு வித்திடும் என்பதாலேயே அமெரிக்க அரசியல்வாதிகள் ஒருவரால் இரு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற ரூல்ஸை கொண்டு வந்தனர். அதன் பிறகு யாரும் அங்கு 3வது முறையாக அதிபராக இருந்ததே இல்லை.. டிரம்ப் ஏற்கனவே 2016-2020 வரை அதிபராக இருந்துவிட்ட நிலையில், இதுவே அவரது கடைசி முறையாக இருக்கும்! ஆனால், அதை மாற்றுவது போல டிரம்ப் சொல்லியுள்ளதே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications