இந்தியாவை எச்சரித்த டிரம்ப்! மீண்டும் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் என்ன ஆகும்? அமெரிக்கா சொன்னது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதால், இந்தியா மீது அமெரிக்கா வரியை விதித்திருந்தது. இந்த வரியை குறைக்க அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பலனளித்துள்ளது. எனவே வரியை அமெரிக்கா குறைத்திருக்கிறது. அதே நேரம் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கினால் என்ன நடக்கும் என்பது குறித்தும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வழக்கமாக எண்ணெய் வாங்கும் நாடுகளில் தடை போட்டுவிட்டு, தான் கை காட்டும் நாடுகளிடம் எண்ணெய்யை வாங்க வைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இப்படி இருக்கையில் இந்தியாவுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

Trump Warns India

என்ன பஞ்சாயத்து?

இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டிருந்தது. இந்த வரி, காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக திருப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்பதால், மத்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்தை வெற்றிப்பெற்றிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ன எப்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஷ்ய எண்ணெய்

அதன்படி, இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யாது. அதற்கு பதில், அமெரிக்கா தான் விதித்திருந்த 50% வரியை 18% ஆக குறைத்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் எல்லாம் ஒகே போலதான் தெரியும். ஆனால், பிரச்சனை இன்னும் முடியவில்லை. ரஷ்யா நம்முடைய நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ஆயுதங்களை நாம் அங்கிருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்திருக்கிறோம்.

ரஷ்யாவின் சலுகை

அதேபோல கச்சா எண்ணெய் விஷயத்திலும் ரஷ்யா நமக்கு ஏராளமான தள்ளுபடியை கொடுத்திருக்கிறது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால், பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. இப்படி இருக்கையில் திடீரென ரஷ்ய எண்ணெய்யை வாங்க கூடாது என்று அமெரிக்கா சொல்லியிருப்பது, இந்தியாவுக்கான லாபத்தை குறைக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

டிரம்ப் எச்சரிக்கை

அதே சமயம், இப்போது வரி குறைக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் இந்தியா எண்ணெய் வாங்கினால், 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெளிவாக எச்சரித்துள்ளார். இந்தியா மறைமுகமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறதா? என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க வர்த்தக துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். எனவே இந்தியாவுக்கான வரி அச்சுறுத்தல் என்பது இன்னும் முடிவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+