ஈராக்கில் நடந்ததை போல.. ஈரானிலும் நடக்கப்போகுது! தரைவழி போருக்கு ரெடியான அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈராக்கில் வான்வழி மட்டுமல்லாது தரைவழியாகவும் சென்று தாக்கியது அமெரிக்கா. ஆனால், ஈரான் விஷயத்தில் இன்னும் அப்படி நடக்கவில்லை. இந்நிலையில், ஈரானிலும் தரைவழியாக படைகளை அனுப்பி போரை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக, அந்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான 'ஆக்ஸியோஸ்' தெரிவித்திருக்கிறது.
இது மட்டும் நடந்தால் நிச்சயம் 3ம் உலகப்போர் வரும் என்று, சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இதனால் மொத்த உலகம் பாதிக்கப்படும்.

திணறும் அமெரிக்கா
என்னதான் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடுமையாக தாக்குதல் நடத்தினாலும், 13 நாட்கள் ஆகியும் ஈரானை இன்னும் முடக்க முடியவில்லை. காரணம் ஈரானின் எண்ணெய் விற்பனை இன்றளவும் தடை செய்யப்படவில்லை என்பதுதான். எனவே, இதனை முடக்கி ஈரானின் வருவாயை பூஜ்ஜியமாக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக 'கார்க்' தீவில் தரை வழி தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த தீவிலிருந்துதான் ஈரான் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது.
இந்த தீவை வான் வழியாக தாக்கினால் மட்டும் சரிபட்டு வராது. எனவே, தரை வழிதாக்குதலை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இப்படி ஒரு திட்டம் இருப்பதை 'ஆக்ஸியோஸ்' உறுதி செய்திருக்கிறது.
அமெரிக்காவின் பிளான்
ஒருவேளை அப்படி ஒரு தாக்குதலை அமெரிக்கா நடத்தினால், அதிக உயிர்களை பலி கொடுக்க வேண்டி இருக்கும். ஈரான் ஒன்னும் லேசுபட்ட நாடு கிடையாது. அந்த தீவை தாக்கி அழிப்பதை விட, எந்த பாதிப்பும் ஏற்படாமல் கைப்பற்றுவதுதான் அமெரிக்காவின் நோக்கம். எனவே முதலில், தீவில் உள்ள வான் பாதுகாப்பு அம்சங்களை தாக்கி அழிக்க வேண்டும். இதற்கு F-35 போன்ற அதிநவீன விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தும்.
கடும் மோதல்
இருப்பினும் ரஷ்ய தயாரிப்பான S-300 போன்ற வான் பாதுகாப்பு அம்சங்களை எளிதில் தாக்கி அழித்துவிட முடியாது. ஆனாலும் எப்படியாவது அழித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையை வேகமாக எடுக்க வேண்டும். குறிப்பாக, கடற்படை வீரர்களை தீவுக்குள் அனுப்ப வேண்டும். அதே நேரம், வான் வழியாக சரக்கு கப்பல்களை வைத்து, வீரர்களை உள்ளே இறக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு முன்னர், அந்த தீவின் சைபர் பாதுகாப்பை துண்டிக்க வேண்டும்.
சிக்கலில் அமெரிக்கா
இந்த தீவை சுற்றி ஏராளமான கடல் கண்ணி வெடிகளை ஈரான் வைத்திக்கும். இது அமெரிக்க கப்பல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அப்படியே இதையெல்லாம் மீறி உள்ளே வந்தாலும், அங்கிருக்கும் வீரர்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த தீவின் தன்மை குறித்து அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கும். ஆனால், அதற்கேற்ப பயிற்சி இருக்கிறதா? என்பது சந்தேகம். எனவே ஈரான் வீரர்கள் எளிதாக இதில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இவ்வளவு பெரிய தாக்குதல் நடக்கிறது என்றால், அமெரிக்காவுக்கு மற்ற நாடுகளின் சப்போர் தேவைப்படும். அதேபோல ஈரானுக்கும் சீனா, ரஷ்யா நாடுகள் உதவலாம். இது 3ம் உலகப்போரை இழுத்துவிட வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications