உலகமே பார்க்க.. அசிங்கப்படுத்திய ட்ரம்ப்! வெறும் வயிற்றோடு வெளியேறிய ஜெலன்ஸ்கி! பின்னணி இது தான்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெகன்சியை கடுமையாக சாடியது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விருந்தில் கூட பங்கேற்காமல் ஜெலன்ஸ்கி வெளியேறிய நிலையில் அதற்கு உக்ரைன் போர் மட்டுமே காரணம் அல்ல எனவும், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் தான் டிரம்ப் வெறுப்பை உமிழ காரணம் என்கின்றனர் உலக அரசியலை உற்றுநோக்கும் நிபுணர்கள்.
நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போதே தான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் உக்ரைன் போரை நிறுத்துவேன் என ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட குழுவை அமைத்தது. ஆனால் போரால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைன் தரப்பில் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த 19ஆம் தேதி துபாயில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சரும், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சரும் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உக்ரைன் தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.

அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பை கேட்காமலேயே நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை நிராகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெலன்ஸ்கி அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்த, அதற்கு முடியாது என்றார். மேலும் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா உறுதியளித்தால் மட்டுமே கையெழுத்திடுவேன் என ஜெலன்ஸ்கி கூறினார்.
இதனால் நேரடியாக இரு தரப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எங்கள் பைத்தியக்கார அதிபர் ( பைடன்) 350 மில்லியன் டாலர் கொடுத்ததால் தான் உங்களால் போரிட முடிந்தது என பைடனை விமர்சித்ததோடு முகத்தில் அடித்தார் போல் ஜெலன்ஸ்கியிடம் பேசினார் ட்ரம்ப். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பது போல டிரம்பின் நடவடிக்கைகள் தெரிந்தாலும் அது முழுக்க முழுக்க ஜலன்ஸ்கி மீதான கோபத்தின் வெளிப்பாடுதான். ஆனால் தற்போது இந்த சம்பவம் நடந்தது அல்ல. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற போது அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

அப்போது அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் ஜனநாயக கட்சியின் ஈமெயில்களை ஹேக் செய்து வெளியிட்டதாகவும், ஒரு மின்னஞ்சலில் 2016 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் வரவேண்டும் என கட்சி தலைமை விரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அப்போது குடியரசு கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்போது ஹிலாரி தோல்வியடைந்து டிரம்ப் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக இருந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்ததோடு, உக்ரைன் ஹக்கர்கள் இதில் ஈடுபட்டு ரஷ்யா மீது அவதூறு பரப்புவதாகவும் பேசி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் பேசிய ட்ரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், உக்ரைனில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொள்ளவில்லை.
இதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனின் மகனான ஹன்ட் பைடன் ஒரு உக்ரைன் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தார். அந்த நிறுவனத்தின் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் பைடன் துணை அதிபராக இருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பைடன் மீது புகார்களை முன்வைக்க வேண்டுமென ஜலன்ஸிடம் ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால் அதற்கும் ஜெலன்ஸ்இ ஒப்புக்கொள்ளவில்லை. தொடந்து தேர்தலில் தோல்வி, வெள்ளை மாளிகை கலவரம், ட்ரம்ப் மீது வழக்கு என சில நிகழ்வுகள் அவருக்கு எதிராக அமைந்த நிலையில் அதற்கெல்லாம் காரணம் ஜெலன்ஸ்கிதான் என கோபத்தில் இருந்த ட்ரம்ப், தற்போது அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
கடலில் கண்ணிவெடி வச்ச இடத்தை மறந்த ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பெரிய டேஞ்சர்.. போச்சு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications