உலகளவில் வர்த்தக போரை ஆரம்பிக்கும் டிரம்ப்? இந்தியாவையும் விட்டுவைக்க மாட்டார் போலயே! ஷாக்
வாஷிங்டன்: இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பை இன்று திடீரென எச்சரித்த டிரம்ப், இந்த நாடுகளுக்குக் கூடுதலாக வரி விதிக்கப் போகிறேன் என்பது போலக் கூறியிருக்கிறார். அவர் இதுபோல உலக நாடுகளுக்கு எதிராக இஷ்டத்திற்கு வரி விதித்தால் அது மீண்டும் சர்வதேச அளவில் வர்த்தக போரைத் தொடங்கிவிடும்.
கடந்த நவ. மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப்.. மோசமான நிலையில் இருக்கும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றப் போகிறேன் என்ற கோஷத்தை வைத்தே ஆட்சியைப் பிடித்தவர் டிரம்ப்.
டிரம்ப்: டிரம்பை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது மேஜர் பிரச்சினையாகப் பார்க்கிறார். இதனால் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் வருவதில்லை என்றும் இதன் காரணமாகவே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் டிரம்ப் சொல்லி வருகிறார். ஏற்கனவே கடந்த 2016- 2020 வரை அதிபராக இருந்த போது இதைக் காரணமாகச் சொல்லியே சீனாவுக்குக் கூடுதல் வரியை அவர் விதித்து இருந்தார்.
இப்போது மீண்டும் அவர் அதிபராகப் பதவியேற்கும் நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் பிரிக்ஸ் அமைப்பை எச்சரித்துள்ளார். அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு டாலரை தவிர வேறு கரன்சியை பயன்படுத்த பிரிக்ஸ் நாடுகள் முயன்றால் 100% வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா உடன் எந்தவொரு வர்த்தகமும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் மிரட்டியிருக்கிறார்.
வரி: இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பிரிக்ஸ் நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை ஏற்க முடியாது. இந்த நாடுகள் டாலரில் இருந்து விலகிச் செல்ல மாட்டோம் என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிப்போம். மேலும், அமெரிக்கா உடன் எந்தவொரு வர்த்தகத்தையும் செய்ய முடியாது" என்று கூறியிருக்கிறார்.

மேலும் சில மோசமான வார்த்தைகளைக் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச வர்த்தகத்திற்கு டாலரை தவிர வேறு எந்தவொரு கரன்சியையும் பிரிக்ஸ் அமைப்பால் பயன்படுத்த முடியாது என்றும் அப்படிப் பயன்படுத்த முயன்றால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு குட்பை சொல்லிவிடும் என மிரட்டியுள்ளார்.
டிரம்ப் திட்டம் என்ன: முன்னதாக கடந்த அக். மாதம் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், "நாங்கள் யாரிடமும் புதிதாக வரி போடுவதில்லை.. வரி என்பது எப்போதும் எனது திட்டத்தில் இருந்ததே இல்லை. ஆனால், எந்த நாடுகள் நம்மால் அதிக பலன் அடைகிறதோ.. அவர்களிடம் வரி வசூலிப்பதில் தவறு இல்லை. சீனா நம்மிடம் இருந்து 200% லாபம் அடைகிறார்கள். பிரேசில் கூட.. அதேபோல அமெரிக்கா அதை விட அதிகமாக வசூலிக்கிறார்கள். ஆனால், அதைப் புன்னகையுடன் செய்கிறார்கள்" என்றார்.
டிரம்ப் இதுபோல இஷ்டத்திற்கு வரி விதித்தால் பதிலடியாக அந்த நாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கும். இதனால் ஒருவித வர்த்தக போர் ஆரம்பிக்கும். இதற்கு முன்பு அதிபராக இருந்த போதும் டிரம்ப் சீனாவுடன் இதுபோல வர்த்தக போரைத் தான் நடத்தினார். இப்போது அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் உலகெங்கும் டிரம்பை இதையே தான் செய்வார் என்று அஞ்சப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications