இந்தியா திருடிவிட்டதாம்.. டிரம்ப் நிர்வாகம் அடாவடி.. வீடியோவை வெளியிட்டு பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஹெச்-1பி விசாவை தவறாகப் பயன்படுத்துவோர் என வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், இந்தியா மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்று வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹெச்-1பி விசா மூலமாகவே சென்றனர். இது இந்தியாவின் ஐடி துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவுக்கும் கூட இது பல வழிகளில் பயனளித்தது.

Trump s US Labour Dept Ad Targets H-1B Visa Abuse Claims 72 Go to Indians sparks controversy

டிரம்ப் நிர்வாகம்

ஆனால், டிரம்ப் வந்த பிறகு நிலைமை மாறியது. முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த டிரம்ப், பிறகு சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். இதனால் வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும், ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தையும் கூட அவர் பல மடங்கு உயர்த்தினார். இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்.

இதற்கிடையே அமெரிக்காவின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள வீடியோ இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஹெச்-1பி விசா திட்டத்தைப் பல நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகவும் குறிப்பிட்டு அந்த வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

அதாவது பொதுவாக அமெரிக்கர்கள் கடினமாக வேலை செய்தால் முன்னேறலாம்.. அனைவரும் முன்னேறும் வாய்ப்பை அமெரிக்கா தரும் எனச் சொல்வார்கள். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல்வாதிகளின் துணையுடன் பல நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தின. இதனால் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வெளிநாட்டினருக்குப் போய்விட்டது என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் நேரடியாகவே ஹெச்-1பி விசா திட்டத்தை இந்தியா தான் அதிகம் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதில் மேலும், "ஹெச்-1பி விசா திட்டத்தின் துஷ்பிரயோகம் காரணமாக அமெரிக்க இளைஞர்களின் வேலைகள் வெளிநாட்டு ஊழியர்களால் பறிக்கப்பட்டு, இளைஞர்களின் அமெரிக்க கனவு திருடப்பட்டுள்ளது.

மாறுதாம்

ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த நிறுவனங்களைத் தங்கள் தவறுக்கு பொறுப்பேற்க வைத்தார். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இது அமெரிக்க இளைஞர்களுக்குத் தேவையான வாய்ப்பைக் கொடுக்கிறது" என்று அமெரிக்கத் தொழிலாளர் துறை வீடியோவில் கூறப்பட்டுள்ளது. 51 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ஹெச்-1பி விசாக்கள் 72 சதவீதம் வரை இந்தியர்களுக்கு வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை "புராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall) என டிரம்ப் நிர்வாகம் குறிப்பிடுகிறது. இதன் மூலம் ஹெஎச்-1பி விசா முறையைத் தவறாகப் பயன்படுத்திய நிறுவனங்கள் பொறுப்பேற்க வைக்கப்படுவதாகவும் மீண்டும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.

இந்தியர்கள் அதிருப்தி

ஹெச்-1பி விசா என்பது அமெரிக்காவில் வெளிநாட்டினர் நுழையும் ஒரு சட்டப்பூர்வ வழியாகும். அதன் மூலமாக அமெரிக்காவில் ஐடி துறையில் இருந்த தேவைகளை இந்தியா பூர்த்தி செய்தது. இதன் மூலம் இரு நாடுகளுமே பயனடைந்தன. அப்படியிருக்கும்போது இந்தியா திடீரென விமர்சிப்பதை ஏற்க முடியாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+