வெனிசுலாவுக்கு வரி விதித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு சிக்கல்! பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
வாஷிங்டன்: வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த உத்தரவு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

டிரம்ப் சொன்னது என்ன?:
கடந்த 24ம் தேதி இது தொடர்பாக பேசிய டிரம்ப், 1977 ஆம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார சக்திகள் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி, வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 25% சுங்கவரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே வெனிசுலா எண்ணெய் மீது அமெரிக்கா தடைகளை விதித்து வந்தது. ஆனால் இது தனிநபர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் சார்ந்ததாக இருந்தது.
அதாவது PDVSA என்பது வெனிசுலா நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமாகும். PDVSA-விடமிருந்து எண்ணெய் வாங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்க வங்கிகளையோ, கடன் அட்டைகளையோ அல்லது டாலர் பரிவர்த்தனைகளையோ பயன்படுத்த முடியாது. இப்படியான தடைக்கு designations என்று பெயர். ஆனால் ஒவ்வொரு நபர்களை தனித்தனியாக தேடி கண்டுபிடித்து தடைகளை விதிப்பது சவாலானதாக இருந்தது.
இதனையடுத்துதான் ஒரேயடியாக மொத்த நாட்டின் மீதும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகளில் பலனளிக்கிறது.
1. ஒரு நாட்டின் முழு பொருளாதாரத்தையும் பாதிக்கும் வகையில் தண்டனை வழங்குகிறது.
2. தனிநபர் தடைகளை விட இதை அமல்படுத்துவது எளிது
ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும்:
இந்த புதிய தடை முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் எதிராகவும் அமெரிக்கா இதை பயன்படுத்தும் என்று 'ரேபிடன் எனர்ஜி' என்ற ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் கிளென் ஷ்வார்ட்ஸ் கூறியுள்ளார். 'ரேபிடன் எனர்ஜி' என்பது எரிசக்தி சந்தைகள், புவிசார் அரசியல் ஆபத்துகள் மற்றும் எண்ணெய் தொடர்பான கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாகும்.
என்னதான் அமெரிக்கா இப்படி கெடுபிடியான உத்தரவை பிறப்பித்திருந்தாலும் கூட, டிரம்ப் கண்ணில் வெனிசுலாவால் மண்ணை தூவ முடியும் என்றும் 'ரேபிடன் எனர்ஜி' ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. உதாரணத்திற்கு, சீனா, வெனிசுலாவில் இருந்து தினமும் சுமார் 5 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் வாங்கி வந்தது. இப்போது இந்த வர்த்தகம் முழுமையாக நின்றிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
கண்ணில் மண்ணை தூவும் வெனிசுலா:
வெனிசுலாவின் எண்ணெய் கப்பல்கள், நடுக்கடலில் எண்ணெய்யை மற்ற கப்பல்களுக்கு மாற்றிவிடுகிறது. தவிர கப்பல்களின் சிக்னல்களை ஆஃப் செய்துவிடுகிறது. இதனால் எண்ணெய் எப்படி கைமாறுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. சீனா இப்படியாக எண்ணெய் வர்த்தகத்தை யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் தடை உத்தரவை வெனிசுலாவுடன் சேர்ந்து, சீனாவும் கடுமையாக எதிர்த்திருக்கிறது. "அமெரிக்காவின் தடை உத்தரவு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுகிறது. அமெரிக்கா மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது" என்று வெனிசுலாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு:
சரி இதெல்லாம் விடுங்க, இந்த பஞ்சாயத்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு என கேட்கிறீர்களா? வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய்யை வாங்கவில்லை. ஆனால் சீனாவின் எண்ணெய் தேவையில் 55%-ஐ வெனிசுலா பூர்த்தி செய்கிறது. அமெரிக்காவின் தடை உத்தரவால் சீனா வேறு நாடுகளிடம் எண்ணெய் வாங்கும். உதாரணத்திற்கு ரஷ்யா, ஈரான், சவுதி உள்ளிட்ட நாடுகளை நாடுகிறது எனில், எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால் விலையும் உயரும்.
விலை உயர்வால் முதலில் பாதிக்கப்படும் நாடு இந்தியாதான். தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 என்கிற விலையிலும், டீசல் சற்று குறைவாகவும் விற்பனையாகி வருகிறது. இதுவே அதிக விலைதான். சாமானிய மக்கள் இந்த விலையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இப்படி இருக்கையில் மேலும் விலை உயர்ந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கை திண்டாட்டமாகும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!
-
ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா! -
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப் -
வரலாறு காணாத தாக்குதல்.. ஈரான் வலுவிழந்ததா? அமெரிக்க உளவுத்துறை கொடுத்த நெகட்டிவ் ரிப்போர்ட் -
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது? -
உயிருக்கு உத்தரவாதமில்லை.. அமெரிக்காவுக்குள் நுழையாதீங்க! ஈரான் கால்பந்து அணிக்கு டிரம்ப் வார்னிங்! -
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO -
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள் -
ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது -
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு! -
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
92,00,00,000 ரூபாய் பரிசு.. கமேனி மகன் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா! கண் சிவந்த நெதன்யாகு! பரபர!












Click it and Unblock the Notifications