அமெரிக்காவே நினைச்சாலும்.. சீனாவை ஒதுக்கி வைக்க முடியாது! அஸ்திரத்தை கையில் எடுக்கும் டிராகன்
வாஷிங்டன்: வரி, சீன பொருட்களுக்கு தடை என அமெரிக்கா, சீனாவுடன் மல்லுக்கட்டி வருகிறது. இருப்பினும், சீனாவை ஒரேயடியாக புறந்தள்ளி வைக்க முடியவில்லை. காரணம், சீனா உற்பத்தி செய்யும் அரிய வகை காந்தங்கள்தான். இது அமெரிக்காவுக்கு அத்தியாவசிய தேவை என்பதால் சீனாவை ஒதுக்கி வைக்க முடியாத நிலையில் அந்நாடு இருக்கிறது.
ஆட்டோமொபைல் துறை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. இது இன்னும் வேகமாக வளர வேண்டும் எனில் துறைக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் 'அரிய காந்தங்கள்' அதிக அளவில் தேவைப்படுகின்றன. இந்த காந்தங்கள் வாகனங்களில் வெப்பத்தை தடுக்கும் திறன் கொண்டது. எனவே மின்சார வாகன தயாரிப்பிலும், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் இந்த காந்தங்களின் தேவை அதிகமாக இருக்கிறது.

இதை உற்பத்தி செய்வது ரொம்ப கஷ்டமான, காஸ்ட்லியான வேலையாகும். காந்தங்கள் வேண்டும் எனில் அரிய வகை கனிமங்கள் வேண்டும். அது இருந்தால்தான் காந்தங்களை செய்ய முடியும். உலகம் முழுவதும் இந்த வகை கனிமங்கள் ரொம்பவே கம்மியாகத்தான் இருக்கிறது. மட்டுமல்லாது யுரேனியம், தோரியம் போன்றவற்றுடன் இது கலந்து இருப்பதால், இதை பிரித்தெடுப்பது தலைவலி பிடித்த வேலை. மட்டுமல்லாது இந்த கனிமங்களில் கதிரியக்கம் இருப்பதால், இதை வெட்டியெடுப்பவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
சரி எப்படியோ சிக்கல் இல்லாமல் இந்த கனிமங்களை வெட்டி எடுத்தாகிவிட்டது என்று வைத்தக்கொண்டாலும், அதை பிரிதெடுக்க மெனக்கெட வேண்டும்.
1. அமிலம் மூலம் கரைத்தல்
2. தொடர் வடிகட்டுதல்
3. மின்னாற்பகுப்பு (Electrolysis)
இந்த வழிமுறையில்தான் பிரித்தெடுக்க வேண்டும். இதற்கு பல வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். அவ்வளவு நாட்கள் மெஷின்களை ஓட வைக்க மின்சாரமும், எரிபொருளும் அவசியமானது. அப்படியே பிரித்து எடுத்தாலும், அதிலிருந்து வெளியாகும் கழிவுகள் மிகவும் அபாயகரமானவை. எனவே, அவற்றை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். நீர், நிலம், காற்று என எல்லாம் இந்த செயல்முறையின்போது பாதிக்கப்படும்.
சீனாவின் பாவோடோ 'அரிய கனிம' சுரங்கம் உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகும். ஆனால், அங்கு நச்சுக் கழிவுகள் காரணமாக புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இப்படியான பிரச்சனைகளால்தான் இந்த கனிமங்களை யாரும் பிரித்தெடுக்க முன்வராமல் இருக்கிறார்கள். ஆனால் சீனா அதை செய்கிறது.
எனவே அரிய காந்தங்கள் உற்பத்தியில் உலகில் 90%-ஐ சீனா கையில் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் வரி காரணமாக இந்த காந்தங்களை ஏற்றுமதி செய்ய கடந்த ஏப்.5ம் தேதி சீனா தடைவிதித்துவிட்டது. இப்பொது வரி பஞ்சாயத்துகள் ஓய்ந்திருந்தாலும், சீனா காந்த விற்பனையை தொடங்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் ஆட்டோ மொபைல் துறைகள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு சென்றிருக்கின்றன. அமெரிக்காவுக்கும் இதே நிலைமைதான். எனவேதான் என்ன நடந்தாலும், கடைசியில் சீனாவிடம் அமெரிக்கா உடன்பாட்டிற்கு வந்துவிடுகிறது.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, வீம்புக்கு என அமெரிக்கா இந்த காந்தங்களை உற்பத்தி செய்ய தொடங்குகிறது எனில், அதை இப்போதைய தேவையை எட்ட இன்றையிலிருந்து குறைந்தது சுமார் 10 ஆண்டுகளாவது ஆகும். இதுதான் சீனாவிடம் அமெரிக்கா பணிந்து போக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications