அமெரிக்காவில் ஒரே நாளில் 61,640 பேருக்கு கொரோனா - இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது
டெல்லி: அமெரிக்காவில் ஒரே நாளில் 61,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 24,879 ஆக உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,55,395 ஆக அதிகரித்தது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,51,183 ஆக உள்ளது.
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,640 ஆகும். இதனால் அமெரிக்காவில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,58,724 ஆக உயர்ந்துள்ளது.

யு.எஸ். பிரேசில் நிலவரம்
அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,34,853 என உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. பிரேசிலில் 24 மணிநேரத்தில் மட்டும் 41,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பிரேசிலில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 17,16,196 ஆக அதிகரித்திருக்கிறது.

24, 879பேருக்கு கொரோனா
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 24, 879பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் மொத்தம் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,67,.296 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 21,129 ஆகவும் உயர்ந்தது.

4-வது இடத்தில் தென்னாப்பிரிக்கா
ஒருநாள் கொரோனா பாதிப்பில் தென்னாப்பிரிக்கா 4-வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 8,810 பேருக்கு கொரோனா உறுதியானது. தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 2,24,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,602 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர்.
Recommended Video

மகாராஷ்டிரா, தமிழகத்தில் மோசமான பாதிப்பு
இந்தியாவில் மகாரஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் மிக மோசமாக பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 2,23,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,448 ஆகவும் அதிகரித்திருக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,22,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 1700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications