வெனிசுலா பஞ்சாயத்து.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெடிக்கப்போகும் பிரச்சனை! அலர்ட் ஆகும் அமெரிக்கா
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்தியிருக்கிறது. இதற்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் நாளை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்சனையாக வெடித்து கிளம்ப இருக்கிறது.
சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படை நடத்திய தாக்குதலில், வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டார். தற்போது இவர், USS lwo jima எனும் அமெரிக்க போர்க்கப்பலில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மதுரோவுக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் போதைப்பொருள், பயங்கரவாத சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரைப் பிடிக்க ஏற்கனவே 50 மில்லியன் டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மதுரோ கைது செய்யப்பட்டிருப்பதால், வெனிசுலாவை அமெரிக்கா தற்காலிகமாக நிர்வகிக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இந்த கைது நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா என பல்வேறு உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஆபத்தான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். வெனிசுலா தரப்பு, அமெரிக்காவின் நடவடிக்கையை ஏகாதிபத்திய போர் என்று விமர்சித்து இருக்கிறது. இப்படி இருக்கையில் ரஷ்யா, சீனா ஆகியவை கொலம்பியாவுடன் இணைந்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுதம் ஏந்திய தாக்குதலுக்கு எதிராக, தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதற்கு ஐநா சாசனத்தின் 51 வது பிரிவு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கூறி வருகிறது. நாங்கள் நடத்தியது ஆட்சி மாற்றம் அல்ல, மாறாக எங்கள் குடிமக்களை போதை பொருட்கள் மூலம் கொன்று குவித்த தலைவனுக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான தண்டனை என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது.
இந்த சூழலில்தான் நாளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அமெரிக்காவின் நடவடிக்கைகள், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதா என்பது குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெறும்.
ஐநா சாசனத்தின் பிரிவு 2(4), மற்ற நாடுகளுக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்துவதை தடை செய்கிறது. அத்துடன் வேறு ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்குமாறு கட்டாயப்படுத்துகிறது. ஆனால் இதையெல்லாம் டிரம்ப் மீறியிருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களை பொறுத்து இரு நாடுகளும் அடுத்த கட்ட நவடிக்கையில் இறங்கும் என்று சொல்லப்படுகிறது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications