கல்வான் மோதல் நடந்த சில நாட்களில்.. அணு ஆயுத சோதனையை நடத்திய சீனா! ஷாக் தகவல்!
வாஷிங்டன்: கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே வெடித்த மோதல், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த பதற்றத்தை குறைக்க இந்தியா திவிரமாக முயன்ற நிலையில், மறுபுறம் சீனா அணு ஆயுத சோதனையை நடத்தி பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. அணு ஆயுத சோதனையை சீனா மேற்கொண்ட விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தாமஸ் டினானோ, நேற்று முன்தினம் ஜெனிவாவில் நடந்த ஆயுத குறைப்பு மாநாட்டில் இது தொடர்பான விஷயங்களை விரிவாக கூறியிருந்தார்.

அதாவது இந்தியா-சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மோதல் நடந்தது. இந்த மோதல் நடந்து அடுத்த 7வது நாளில், அதாவது ஜூன் மாதம் 22ஆம் தேதி சீனா ஒரு ரகசிய அணு ஆயுத சோதனையை நடத்தியது என்று தாமஸ் கூறியிருக்கிறார். சீனா தனது 'லோப் நூர்' தளத்தில் நூற்றுக்கணக்கான டன் அளவிலான அணு வெடிப்பு சோதனையை நடத்தியதாக தாமஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கமாக அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டால், நில அதிர்வு மூலம் அந்த சோதனைகள் வெளியுலகத்திற்கு தெரிந்து விடும். எனவே நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளில் இருந்து தப்பிக்க.. அணு வெடிப்பை தரைக்கு அடியில் பெரிய குகை போன்ற அமைப்புகளில் நிகழ்த்தும் 'டீகப்ளிங்' முறையை சீனா பயன்படுத்தியிருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எல்லையில் பதற்றம் உச்சத்தில் இருக்கும்போது ஒரு வாரத்தில் சீனா இந்த அணு ஆயுத சோதனையை நடத்தியது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அணு ஆயுத சோதனையை தடை செய்யப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறி உள்ளதாக அமெரிக்கா விமர்சித்திருக்கிறது.
இந்த தகவல் தற்போது வெளியாக காரணம் என்னவென்றால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயாக இடையே இருந்த கடைசி அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
50 ஆண்டுகளில் முதல் முறையாக, உலகின் மிகப்பெரிய இரு அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையே எந்த கட்டுப்பாடும் தற்போது இல்லை. எனவே பெரிய போர் ஏற்படும் முன்னர் அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஆனால், ரஷ்யாவுடன் மட்டும் ஒப்பந்தம் செய்வதில் பயனில்லை என்றும் வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வரும் சீனாவையும் உள்ளடக்கிய ஒரு புதிய முத்தரப்பு ஒப்பந்தம் தேவை என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications