சாத்தியமா?.. அதுவும் 8 மாசத்தில்?.. அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி?.. அமெரிக்கா அதிரடி
பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைவருக்கும் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் போடுவது சிறந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கருதுகிறார்கள்.
உலகம் முழுவதும் தொற்று கவ்வியுள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இந்த இரண்டாவது அலையின் தீவிரம் வீர்யமானதாக இருந்தது.. அதனால்தான் லட்சக்கணக்கானோரையும் காவு வாங்கியது.
இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி வருகிறது.. இந்த நேரத்தில் 4 வது அலையும் வந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் அலர்ட் செய்து, பீதியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

கலக்கம்
மற்றொருபக்கம், இந்த வைரஸ் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது... டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், ஆல்பா என்று இதன் உருமாற்றம் அதிகரிக்கிறது.. இதில் டெல்டா வைரஸ்தான், 2வது அலை பரவலுக்கு முக்கிய காரணியாகவும் இருந்திருக்கிறது. இதற்கான மருந்தை உலக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்..

ஆர்வம்
இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆறுதலாக இருப்பதால், உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பொதுமக்களும் அபாயத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்து கொண்டிருக்கிறார்கள்... சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுதாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர்.

வறுமை
ஆனால், வறுமையில் உள்ள ஒரு சில நாடுகளால், தங்கள் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடவே தடுமாற்றமாக இருக்கிறது.. ஆனால், 2 டோஸ் போட்டுக் கொண்டு, 3வது டோஸ் என்று சொல்லப்படும் பூஸ்டர் டோஸை செலுத்த சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை என்பதால், இந்த 3வது டோஸ் செலுத்துவதில் ஹூ அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்கா
பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தினால், ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையிலும் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவதற்கு அது நிச்சயம் உதவும் என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.. ஆனால், சில தினங்களுக்கு முன்பு, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்திருந்தனர்.. இப்போதைக்கு உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று அதிகமாக உள்ளது..

ஆய்வாளர்கள்
இந்த 3வது டோஸ் செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா வேரியண்ட்டிடம் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என்றும் அந்த நாட்டு ஆய்வாளர்கள் கணித்து சொல்கிறார்கள். அதாவது, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை மீறி சில ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளித்துள்ளதுதான் கவனிக்க வேண்டியதாக உள்ளது..
Recommended Video

தடுப்பூசி
இப்போது தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வயது வித்தியாசமின்றி எல்லாருக்குமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வல்லுனர்கள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன... அநேகமாக அடுத்த மாதம் இதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்றே தெரிகிறது.

பாதுகாப்பு
டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதில் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்பதே அதன் சாராம்சமாக உள்ளது... வல்லுனர்களின் பரிந்துரைக்கு பிறகு எப்டிஏ என்று அழைக்கப்படுகிற அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இது தொடர்பாக இந்த வாரம் தன்னுடைய ஒப்புதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications