வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தைகள் கல்விக்காக.. உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதி உதவி செய்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திரட்டியுள்ளது உதவும் கரங்கள் அமைப்பு.

தமிழ்நாட்டில் பாப்பா வித்யாகர் நடத்தி வரும் உதவும் கரங்கள் இந்தியா மற்றும் பல அயல் நாட்டில் வாழும் நல்லுள்ளங்கள் வழங்கும் நன்கொடையினால் மிக சிறந்த சேவைகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த வருடம் கோவிட் 19 எனும் கொடிய தாக்குதலால் உலகையே உலுக்கி வரும் இந்த வேளையில் அன்றாட வேலை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு , பள்ளிகளும் மூடப்பட்டு குழந்தைகள் கல்வி கற்பதற்கு தடையாக இருக்கும் நிலையில் வறுமைகோட்டின் வலிகளால் கிட்டத்தட்ட 1900 பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் கூலி வேலைக்கு போகும் நிலைக்கு உட்படுத்த படும் காட்டாயத்திற்கு தள்ளப்படுவதை அறிந்த வித்யாகர், உதவ முன் எடுத்தார்.

US based Indians given $50000 to Udavum Karangal

அவரது முயற்சிக்கு உதவும் கரங்கள் அமெரிக்கா அமைப்பின் வழியாக ஹூஸ்டன் நகரத்தில் உள்ள சில இளையோர்கள் முன் வந்து படிப்புக்காக நிதி திரட்டும் பொருட்டு யூ- டூப்(YouTube livestrem) இணையதள வழியாக ஆதி & ஆகாஷ் தலைமையில் அவர்களது தோழிகள் ரியா,வர்ஷா,ஹரிஷினி, சம்யுக்தா என அனைவரும் ஒருங்கிணைந்து மிக பிரபலமான திரைப்பட பாடல்களை பாடியும், பாடலுக்கு நடனம் ஆடியும் சுமார் 600கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து பாராட்டுகளையும் பெற்றதின் மூலமும், முகநூல் பக்கத்தில் பதிவு செய்தும், ஹூஸ்டன் நகரத்தில் உள்ள பல நல்ல உள்ளங்கள் கொண்டவர்களை அணுகி சுமார் $50000(ஐம்பதாயிரம் அமெரிக்கா டாலர்) திரட்டி உள்ளார்கள்.

முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம் பொன்னானது.. தேவ கவுடா நெகிழ்ச்சிமுரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம் பொன்னானது.. தேவ கவுடா நெகிழ்ச்சி

இதனால் 500 குழந்தைகளுக்கு இந்த கல்வி ஆண்டுக்கு நிதி உதவி கிடைக்க வழி வகுத்து கொடுத்த பெருமை, உதவும் கரங்கள் அமெரிக்கா அமைப்பின் தலைவர் பத்மினி நாதனை சாரும். இளைஞர்களை ஊக்கப்படுத்திய அவர்களது பெற்றோர்களுக்கும், நன் கொடை வழங்கிய வள்ளல்களுக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க இளையோர்கள் ஆதி & ஆகாஷ் நன்றியை தெரிவிப்பதோடு முடிந்தவரை உதவி செய்யும்மாறு பணிவுடன் கேட்டுக்கொண்டார்கள்.

US based Indians given $50000 to Udavum Karangal

அமெரிக்கா முழுவதும் உள்ள தன்ஆர்வலர்களை அணுகி உதவுமாறு வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 22ம் நாள், இணைய தளத்தின் வழியாக நிகழ்ச்சிகளும் நடத்தி அதன் மூலம் இலக்கை அடைய ஆயத்த வேலைகள் நடந்து கொண்டுள்ளது. "தானத்தில் சிறந்த தானம் கல்விதானம் அத்தானம் தலையாய தானம்"

English summary
US based Indians given $50000 to Udavum Karangal org for children education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X