ஜாதி பாகுபாடு! தடை போட்ட கலிபோர்னியா! அமெரிக்காவில் முதல்முறை.. எதிர்க்கும் இந்து குழு! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாதிப் பாகுபாட்டை வெளிப்படையாகத் தடைசெய்யும் மசோதா முதல்முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் அதிகம் செட்டிலாகி வரும் நிலையில், அங்கும் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் சாதி ரீதியான பாகுபாட்டைத் தடுக்க ஏற்கனவே சட்டம் இருக்கிறது.. இதனிடையே அமெரிக்காவில் சில மாகாணங்களில் இது குறித்து சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சில காலமாகவே பேச்சு இருந்தது.

US California passes bill to end caste discrimination in US State

அமெரிக்கா: இந்தச் சூழலில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாதிப் பாகுபாட்டை வெளிப்படையாகத் தடைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் கோயில் அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மாநிலத்தின் செனட் குழு இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. செவ்வாய்க்கிழமை இந்த மசோதா அங்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், மசோதா அங்கே ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜாதி தொடர்பான சட்டம் அமெரிக்க மாநில சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், சாதி ரீதியான பாகுபாட்டைத் தடுக்க மசோதா கொண்டு வந்த முதல் அமெரிக்க மாகாணம் என்ற பெயரை கலிபோர்னியா பெறும்.

சாதிய பாகுபாடு: இது குறித்து அங்குள்ள இந்திய அமெரிக்க வல்லுநர்கள் கூறுகையில், "இன்று, சாதியால் ஒடுக்கப்பட்ட கலிஃபோர்னிய மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கப் போகிறது. சாதி ரீதியான பாகுபாட்டை ஒழித்து சமத்துவமான சமூகத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.. கடந்த 15 ஆண்டுகளாகப் போராடியே இந்த சட்டத்தை அமெரிக்காவில் கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டம் நமக்கு உடனடியாக தேவை. அமெரிக்காவில் மிக மோசமாகச் சாதிய பாகுபாட்டைக் காட்டும் இடமாக கலிபோர்னியா இருக்கிறது" என்கிறார்கள்.

US California passes bill to end caste discrimination in US State

அமெரிக்காவில் உள்ள ஈக்வாலிட்டி லேப்ஸ் என்ற நிறுவனம் தான் இது தொடர்பாக அமெரிக்காவில் தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த பிப். மாதம் ஜாதி பாகுபாட்டைத் தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் ஆனது.

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் மேற்கே பசிபிக் கடற்கரையில் சுமார் 39.2 மில்லியன் மக்களுடன் அமைந்துள்ள மாகாணம் தான் கலிஃபோர்னியா.. அது அதிக மக்கள்தொகை அடிப்படையில் அதிக மக்களைக் கொண்ட மாகாணம். அதேபோல பரப்பளவில் மூன்றாவது பெரியதாகும்.. மேலும், அங்கே இந்தியர்களின் மக்கள் தொகையும் கணிசமாக உள்ளது. எனவே, இந்த மாகாணத்தில் இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இது குறித்து 'இந்துக்கள் சாதி சமத்துவத்திற்கான' பூஜா ரென் கூறுகையில், "சாதிப் பாகுபாடு சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் நியாயமற்றது. இந்த மசோதா சாதியின் கொடுமைகளிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்கும்" என்றனர். அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம் மற்றும் ஆப்கானிய அமெரிக்கரான மாநில செனட்டர் ஆயிஷா வஹாப் கடந்த மாதம் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

எதிர்ப்பு: இருப்பினும், இந்த மசோதாவுக்குப் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. முக்கிய இந்திய வணிகங்கள் மற்றும் கோவில்கள் இந்த சாதி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 20,000 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்காவின் மிகப்பெரிய ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமான ஆசிய அமெரிக்கன் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்துபோபியா காரணமாகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் இரண்டாவது இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்த குழு இதுவாகும். அமெரிக்காவில் கடந்த 2018 கணக்கெடுப்பின்படி அங்கே சுமார் 42 லட்சம் இந்தியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+