டிரம்ப் ஈகோ.. போன் செய்யாத மோடி.. இந்தியா மீதான 50% வரிக்கு "இது" தான் காரணம்! அமெரிக்கா பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்தாண்டே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது இறுதியாகவில்லை. இதனால் அமெரிக்கா இறக்குமதிக்கு இந்தியா சுமார் 50% வரியை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் போக என்ன காரணம் என்பது குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு ஏப்ரலில் உலக நாடுகள் மீது திடீரென வரிகளைப் போட்டார். பிறகு சில காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், சில மாதங்களில் வரிகள் மீண்டும் அமலுக்கு வந்தன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் டிரம்ப் தரப்பு வரிகளை அறிவித்திருந்தார்.

50% வரி
கடந்த ஆகஸ்டில் இந்தியாவுக்குச் சுமார் 50% வரியை அமெரிக்கா விதித்தது. ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்குவதாலேயே இந்த வரி எனச் சொல்லப்பட்டாலும் கூட வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் போனதும் இதற்கு ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதியாகாமலேயே இருந்து வந்தது.
பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் ஏற்படவில்லை என்றும் அதுவே சிக்கலுக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. குறிப்பாக விவசாயம் மற்றும் பால் சார்ந்த துறைகளில் அமெரிக்க நிறுவனங்களை அனுமதிப்பதில் இந்தியாவுக்குத் தயக்கம் இருப்பதாகவும் அதுவே சிக்கலுக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
வர்த்தக ஒப்பந்தம்
ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் இருக்க வேறு ஒரு காரணத்தை அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லூட்னிக் கூறியிருக்கிறார். அதாவது இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தோல்வியடைந்ததற்குக் கொள்கை வேறுபாடுகள் காரணமல்ல என்றும் மாறாகப் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடியாகப் பேச மறுத்தது தான் முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்..
வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்தது என்ற லூட்னிக், அப்போது டிரம்ப்பிற்கு போன் போட்டு மோடி பேசியிருந்தால் எல்லாம் சுமுகமாக முடிந்திருக்கும் என்றும் இந்தியா தயக்கம் காட்டியதால் மோடி அழைக்கவில்லை என்றும் லூட்னிக் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதுவே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாமல் போக முக்கிய காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காரணம் இதுதான்
இது தொடர்பாக லூட்னிக் மேலும் கூறுகையில், "இந்தியா அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம் அனைத்தும் தயாராக இருந்தது. ஆனால் அது ட்ரம்ப்பின் ஒப்பந்தம். அவர்தான் முடிவெடுப்பவர். அவரே ஒப்பந்தத்தைச் செய்பவர். அந்த நேரத்தில் மோடி டிரம்ப்பை அழைத்திருக்க வேண்டும். இருப்பினும், அந்த சூழலில் டிரம்ப்பை அழைப்பது சரியாக இருக்காது என இந்தியா கருதியதாகத் தெரிகிறது..
இதனால் அவர்கள் அழைக்கவில்லை. மறுபுறம் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாமுடன் ஒப்பந்தங்கள் செய்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நாடுகளுக்கு முன்பே இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எதிர்பார்த்தோம்" என்று விளக்கினார்.
இப்போது டீல் இல்லை
அப்போது வர்த்தக ஒப்பந்தத்தில் சில விஷயங்களை ஒப்புக்கொண்டு இருந்தோம் என்றும் ஆனால் இப்போது அவை பேச்சுவார்த்தையில் இல்லை என்றும் லூட்னிக் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "முன்பு ஒப்புக்கொண்ட அந்த வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிட்டது. இப்போது அது தொடர்பாக நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் நடத்துவதில்லை" என்றார்.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications