அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வானார் தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக வேட்பாளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவிகிதம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஓபாமா போட்டியிட்ட போது அவரால் முன்மொழியப்பட்டவர் ராஜாகிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.

1973ஆம் ஆண்டு டெல்லியில் ஜூலை 19ஆம் தேதி பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அப்பா ராஜபாளையம். அம்மா தஞ்சாவூர். இவரது மனைவியும் தமிழ்நாடுதான். அப்பா சுப்பிரமணியம் டெல்லியில் வேலை பார்த்தவர். அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க, அங்கேயே செட்டிலாகி விட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் முன்னாள் உள்ள ராஜா' ராஜபாளையத்தைக் குறிக்கும்.
நியூயார்க்கில் பெற்றோர்களுடன் குடியேறிய கிருஷ்ணமூர்த்தி சிவானந்தன் ஆய்வகம் மற்றும் மருத்துவமனையின் பொறுப்பாளராக பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2004ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசாரத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு ஓபாமாவின் தனி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்துக்காரர் என்பதோடு ஒபாமாவின் நண்பர். கடந்த முறை போட்டியிட்ட போது டிரம்ப் அலையையும் மீறி வெற்றி பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பராக் ஒபாமாவின் தொகுதியான இல்லினாய்ஸ் மாகாணத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications