ஜோ பிடனை வச்சிகிட்டு ஜனநாயக கட்சி படுற பாடு இருக்கே.. தேர்தல் நேரத்தில் கவுண்டமணி பாணியில் கண்டிஷன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார். இந்நிலையில் தான் இரவு 8 மணிக்கு மேல் எங்கேயும் வரமாட்டேன் என அவர் கண்டிஷன் போட்டுள்ளார். சின்னத் தம்பி படத்தில் ஒரு கோடி கொடுத்தாலும் மாலை 6 மணிக்கு மேல் எங்கேயும் வர மாட்டேன் என்று கவுண்டமணி கண்டிஷன் போடுவதை போல இருப்பதால், ஜனநாயக கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஹேப்பியாகியுள்ளார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் என்பது நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் ஜோபைடனின் பதவிக்காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். அவர் குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
அதேபோல் வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன் களமிறங்குவதில் ஆர்வமாக உள்ளார். மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அவர் முயற்சித்து வருகிறார். ஆனால் ஜோ பைடனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் பேசும்போது அவர் சில விஷயங்களை கவனக்குறைவாக கூறி விடுகிறார். இதனால் ஜோ பைடனுக்கு பதில் ஜனநாயக கட்சி சார்பில் புதிய நபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
அதாவது ஜோ பைடனுக்கு பதில் முன்னாள் அதிபர் பராக் ஓபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை அதிபர் வேட்பாளராக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இப்போது வரை அதிபர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் பெயர் தான் முன்னிலை உள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார்.
இந்த விவாதம் என்பது ஜோ பைடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதாவது பல்வேறு விஷயங்களில் டொனால்ட் டிரம்ப் தனது கருத்தை ஆணித்தரமாக அடித்து கூறினார். ஆனால் ஜோ பைடன் திணறினார். அமெரிக்க வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் எந்தளவுக்கு முன்னேறி உள்ளது, புவிசார் அரசியலில் சாதித்தது உள்ளிட்ட விஷயங்களில் ஜோபைடன் கோட்டை விட்டார். இதனால் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ளது.
இதற்கிடையே தான் தற்போது ஜோ பைடனின் ஒரு செயல் அவரது உடல்நலம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் தனக்கு எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யக்கூடாது. அப்படி ஏற்பாடு செய்தால் அதில் பங்கேற்கமாட்டேன். இதனால் அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 8 மணிக்குள் முடித்தாக வேண்டும் என்று அவர் கட்சியினரிடம் கூறியுள்ளாராம்.
அதாவது அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆளுநர்களுடன் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தான் அவர் இப்படி தெரிவித்துள்ளார். அதாவது இரவு 8 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் வேண்டாம். எனக்கு அதிக தூக்கம் தேவையானதாக உள்ளது. இதனால் குறைவான நேரம் மட்டுமே என்னால் பணி செய்ய முடியும். இதற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து நான் பின்வாங்கப்போவது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஜோபைடனுக்கு 81 வயது ஆகும் நிலையில் அவரால் இயல்பாக செயல்பட முடியாத நிலை உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த உத்தரவு என்பது அவரது சோர்வான உடல்நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளதாக கட்சியினர் நினைக்கின்றனர். ஏனென்றால் அமெரிக்க அதிபர் பதவி என்பது மிகவும் முக்கியமானது. எப்போது ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். ஆனால் ஜோ பைடன் இப்படி கூறியிருப்பதால் ஜனநாயக கட்சியினர் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications