அமெரிக்க தேர்தல்.. இன்னும் 8 மாகாணங்களில் மட்டும் ரிசல்ட் வர வேண்டியுள்ளது.. யார், எங்கு முன்னிலை?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், நேற்று முதல் வெளியாகி வருகின்றன. இதுவரை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. இதற்கு காரணம், சில மாகாணங்களில் இன்னும் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்பதால், அதிபர் யார் என்பதை இறுதி செய்ய முடியவில்லை.
மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், பென்சில்வேனியா உட்பட 8 மாகாணங்களில் ரிசல்ட் வர வேண்டியுள்ளது.
அதேநேரம், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் குடியரசுக் கட்சியின் அதிபர் டொனால்ட் டிரம்பை விட அதிக தேர்தல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இன்னும் முடிவுகள் வெளிவராத மாகாணங்கள் எவை? அங்கே நிலவரம் என்ன? என்பதை பார்க்கலாம்.

அலாஸ்கா
டிரம்ப் இங்கு பெரிய அளவுக்கு முன்னிலை வகிக்கிறார், மேலும் மாகாணத்தை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குகளில் 56% மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. டிரம்ப் 62.9% வரை முன்னிலையில் உள்ளார்.

அரிசோனா
ஜோ பிடனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னிலை உள்ள மாகாணம் அரிசோனா. அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஏற்கனவே ஜனநாயகக் கட்சிதான் அங்கு வெல்லும் என கணித்துள்ளன. எடிசன் ரிசர்ச் படி, பிடன் 50.7% வாக்குகளை பெற்றுள்ளார், டிரம்ப் 47.9% ென்ற அளவில் உள்ளார்.
அரிசோனா வெளியுறவுத்துறை செயலர் கேட்டி ஹோப்ஸ் ஏபிசி நியூஸிடம், கூறுகையில், அதிக மக்கள் தொகை கொண்ட பீனிக்ஸ் அடங்கிய மரிகோபா கவுண்டியில் சுமார் 400,000 நிலுவையில் உள்ள வாக்குகள் எண்ணப்பட உள்ளன. எனவே முடிவுகள் மெல்ல வெளியாகின்றன.

ஜார்ஜியா
டிரம்ப் சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார், ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ள அட்லாண்டாவைச் சுற்றியுள்ள பல பெரிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 95% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 49.7% மற்றும் 49% பிடன் பெற்றுள்ளனர்.

மைனே
எடிசன் ரிசர்ச் பிடனுக்கு முன்னிலை இருப்பதாக கணித்துள்ளது. அவர் 53.8% வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். மாநிலத்தின் வாக்குகளில் 87% எண்ணப்பட்டுள்ளது.

நெவாடா
நீண்ட காலமாக ஜோ பிடென் ஆதரவு மாநிலமாகக் காணப்பட்ட நெவாடா இப்போதும் அதையே பிரதிபலிக்கிறது. எடிசன் ரிசர்ச் டேட்டா, மொத்தத்தில், வாக்குகளில் 86% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. பிடனின் முன்னணி 49.3%, டிரம்பிற்கு 48.7% முன்னிலை இருக்கிறது.

வட கரோலினா
டொனால்ட் ட்ரம்பிற்கும் பிடனுக்கும் இடையிலான வித்தியாசம் 2 சதவீத புள்ளிகளுக்கும் குறைவாக உள்ளது, ஏனெனில் ஜனநாயகக் கட்சி 50.1% வாக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த வாக்குகளில் 95% எண்ணப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா
போர்க்கள மாநிலங்களில், பென்சில்வேனியா முக்கியமானது. அதாவது முடிவுகளை தீர்மானிக்கும் மாகாணங்களில் இதுவும் ஒன்று, யார் பக்கம் சாய்வார்கள் என முன்கூட்டியே கணிக்க முடியாது. டொனால்ட் டிரம்ப் இதுவரை முன்னிலை வகிக்கிறார். வாக்குகளில் 88% எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.8% பெற்றுள்ளார். ஜோ பிடன் 47.9% பெற்றுள்ளார்.

விஸ்கான்சின்
விஸ்கான்சினில் வாக்குகளை நிறுத்தி மறு எண்ணிக்கை செய்ய டிரம்ப் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அங்கு ஜோ பிடன் 49.4% ஓட்டுக்களை பெற்றுள்ளார். டிரம்ப் 48.8% ஓட்டுக்களை பெற்றார். 99 சதவீதம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டுள்ளன. இதில் அரிசோனா, நெவாடா ஆகிய மாகாணங்களில் பிடன் வென்றாலே போதும். அவர் தேவைப்படும் 270 ஓட்டுக்களை கடந்துவிடுவார்.












Click it and Unblock the Notifications