அமெரிக்கா வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்! இந்தியாவில் உள்ள தூதரகம் திடீர் வார்னிங்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சட்ட விரோத குடியேற்றங்களுக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரித்து வரும் நிலையில், இந்தியர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளது. அனுமதி காலத்தை தாண்டி அமெரிக்காவில் தங்கியிருந்தால் இனி நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக அவர் பொறுப்பேற்றார். தனது தேர்தல் பிரசாரத்தின் போதே அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை கொடுப்பேன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியவர்களை வெளியேற்றுவேன் என்று டிரம்ப் கூறி வந்தார்.

us-embassy-in-india-issues-new-travel-warning-permanent-ban-on-future-visits-for-some-visa-holders

அதிகாரத்திற்கும் வந்ததும் முதல் வேளையாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்ற தொடங்கினார். ஒருபக்கம் இப்படி என்றால் மற்றொரு பக்கம், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். தற்போது இந்த வரி விதிப்பை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளார். எனினும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இப்படியாக தொடர்ச்சியாக டிரம்ப் அதிரடி காட்டி வருகிறார்

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று இந்தியர்களுக்கு கடுமையான வார்னிங் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் தங்கியிருக்க சட்டப்பூர்வ அனுமதி காலம் தாண்டியும் தங்கியிருந்தால், நீங்கள் நாடு கடத்தப்படுவீர்கள் என்றும், எதிர்காலத்தில் அமெரிக்கா செல்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு சுற்றுலா விசா, மாணவர்கள் விசா, பணி விசா என பல்வேறு விசாக்களை பெற்று செல்லும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+