இனி அமெரிக்கா கனவு தான் போல.. விசா கிடைத்தால் மட்டும் போதாது! இந்தியர்களுக்கு அதிர்ச்சி தந்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வது கடினமாக மாறி வருகிறது. மேலும், சிறு விதிமீறலுக்குக் கூட நாடுகடத்தப்படும் சம்பவங்களும் நடக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை டிரம்ப் நிர்வாகம் கொடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். ஆனால், டிரம்ப் வந்த பிறகு அமெரிக்கா செல்வது கடினமாகிவிட்டது. சட்டவிரோதமாக நுழைவோரைத் தடுப்பேன் எனச் சொன்ன டிரம்ப், சட்டப்பூர்வமாக அமெரிக்கா செல்வதையும் கடினமாக மாற்றி வருகிறார்.

US Embassy in India Warns of Visa Revocation and Deportation for Non-Compliance

அமெரிக்கத் தூதரகம்

இதற்கிடையே மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை அமெரிக்க இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் அங்குள்ள சட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளைப் பின்பற்றத் தவறினால் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் குடிவரவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

பரிசோதனை முடியாது

இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருவருக்கு விசா வழங்கப்பட்ட உடன் அமெரிக்க விசாவிற்கான பரிசோதனை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அனைத்து அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் குடிவரவு விதிகளையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த விசா வைத்திருப்பவர்களை நாங்கள் தொடர்ந்து சரிபார்க்கிறோம். அவர்கள் தவறினால் அவர்களின் விசாவை ரத்து செய்து அவர்களை நாடு கடத்துவோம்" என்று தெரிவித்துள்ளது.

ஏகப்பட்ட ரூல்ஸ்

முன்னதாக சமீபத்தில் தான் எஃப், எம் உள்ளிட்ட விசாவிற்கு விண்ணப்பிப்போர், அதாவது மாணவர்கள் மற்றும் எக்சேஜ் பிரிவில் விசாவுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளை பப்ளிக்காக வைத்திருக்க வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தியிருந்தது. அதாவது சமூக வலைத்தளங்களிலும் ஒருவர் என்ன பதிவிட்டிருக்கிறார் என்பதைப் பொறுத்தே விசா வழங்கப்படும். அதற்குச் சமூக வலைத்தளங்களை ஈஸியாகவே ஆய்வு செய்யவே இதுபோல பப்ளிக்காக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நிரந்தரமாகக் கிடைக்காது

அதேபோல சமூக வலைத்தளங்களை வைத்துக் கொண்டே இல்லை எனச் சொல்வது.. அல்லது அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவே மறுப்பது உள்ளிட்ட காரணங்களுக்கும் கூட விசா மறுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சமூக வலைத்தளக் கணக்குகளை வைத்துக் கொண்டே பொய்யான தகவல்களைப் பகிர்ந்தால் நிரந்தரமாகவே கூட விசா பெற முடியாத நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

விசா கட்டணங்கள்

கடந்த மாதம் தான் அமெரிக்கத் தூதரகம் வேறு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. அதாவது அமெரிக்க விசா என்பது உரிமை அல்ல சலுகை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு விசா குறித்த முடிவும் தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்றும் தெரிவித்திருந்தது. இதுபோக அனைத்து அமெரிக்க விசாக்களுக்கும் புதிதாக 250 டாலர் 'விசா ஒருமைப்பாடு கட்டணம்' என்ற ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்பதாரர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் இந்தக் கட்டணம் திரும்பப் பெறப்படும் என்றும் இது 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல அமெரிக்கா புதிய புதிய விதிகளை வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்தச் சூழலில் தான் விசா வழங்கப்பட்ட பிறகும் கூட பரிசோதனை முடிந்ததாகக் கருதப்படாது என்று கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+