Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடா தூதர்கள் வெளியேறியது கவலையளிக்கிறது.. விதிகளை இந்தியா பின்பற்றும் என நம்புகிறோம்.. அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என இந்தியா எச்சரித்து இருந்த நிலையில், 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெற்றது. இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியா வியன்னா உடன்படிக்கையின் படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீர்ப் சிங் நிஜார் கடந்த மாதம் ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குருத்வாரா அருகே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால், இது தொடர்பான ஆதாரங்கள் எதையும் அளிக்காமல் இப்படி ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தது.

 US express concern over the departure of Canadian diplomats from India

ஹர்திப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்த கனடா, தங்கள் நாட்டில் இருந்த இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடா தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

41 தூதரக அதிகாரிகள்: இதனால் இந்தியா - கனடா இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டினருக்கு விசா வழங்குவததை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு கனடாவிற்கு இந்தியா அறிவுறுத்தியது.

அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் தூதர்களை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் கனடா திரும்ப பெறவில்லை. இதனால், அக்டோபர் 20-ந் தேதிக்கு பிறகு 41 தூதரக அதிகாரிகளின் தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. மத்திய அரசு விதித்த கெடு முடிவடைய இருந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகள் கனடா திரும்பி சென்றனர்.

வியன்னா உடன்படிக்கை: தொடர்ந்து இந்தியாவின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது எனவும் கனடா சாடியிருந்தது. இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கனடா தூதர்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை இரு நாடுகளிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடினமாக்குகிறது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகள் வாபஸ் பெற்ற நிலையில், ட்ரூடோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனடா தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா கூறுகையில், இந்தியா 1961 ஆம் ஆண்டின் வியன்னா உடன்படிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்யும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+