"கிரீன் கார்டு.." டிரம்ப் முடிவால் பல லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து! 4 மேஜர் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே அங்கு தற்போது கிரீன் கார்டு பிராசஸிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே கிரீன் கார்டு கோரி பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி உள்ள நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதனால் அங்கு இந்தியர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினரின் கனவு கிரீன் கார்டு தான். எப்படியாவது கிரீன் கார்டு வாங்கிவிட்டால் போதும் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கலாம். ஒவ்வொரு முறையும் விசா அது இது என அலையத் தேவையில்லை. ஆனால், ஏற்கனவே கிரீன் கார்டு பரிசீலிக்கும் முறையில் பல்வேறு தாமதங்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

US Freezes Green Card Processing 4 Ways Indians May Be Impacted

கிரீன் கார்டு தாமதம்

இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது கிரீன் கார்டு பிராசஸிங் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு கிரீன் கார்டு கனவுடன் உள்ள வெளிநாட்டினரைப் பாதிக்கிறது. அதிலும் அமெரிக்காவில் இந்தியர்களே அதிகம் வசிக்கும் நிலையில், அவர்களை இது மோசமாகவே பாதிக்கிறது. இதனால் இந்தியர்கள் எதிர்கொள்ளும் 4 மேஜர் பிரச்சினைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

பிரச்சினை 1

கிரீன் கார்டுகளை பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு கிரீன் கார்டு தான் ஒதுக்க முடியும் என்ற வரம்பு இருக்கிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கிரீன் கார்டு பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. H-1B விசா மூலம் அமெரிக்காவில் குடியேறிய பல இந்தியர்கள் தங்கள் கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஹெச் 1பி விசா என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அது காலாவதி ஆகும் முன்பு கிரீன் கார்டு பெற இந்தியர்கள் முயல்கிறார்கள். ஆனால், தாமதம் அதிகம் இருப்பதால் விசா காலத்திற்குள் கிரீன் கார்டு பெறுவது இந்தியர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. கிரீன் கார்டு தாமதம் ஆவதால் இந்தியர்கள் உரிய பெர்மிட் இல்லாமல் வேலையிழப்பை எதிர்கொள்கிறார்கள். நாடு கடத்தலுக்கும் காரணமாக இருக்கிறது. இது முதலாவது பிரச்சினை.!

பிரச்சினை 2- பல ஆண்டு காத்திருப்பு

அதேபோல வேலைவாய்ப்பு சார்ந்த சில பணியில் இருப்போர் கிரீன் கார்டு ஒப்புதலுக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று கேட்டோ என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த துறையிலும் இந்தியர்கள் அதிகம் இருக்கும் நிலையில், இது பிரச்சினையை மோசமாகவே மாற்றுகிறது.

பிரச்சினை 3- இந்திய குடும்பங்களுக்குச் சிக்கல்

அமெரிக்காவில் ஸ்பான்சர் என்ற ஒரு கான்சப்ட் இருக்கிறது. அதாவது இந்தியர் ஒருவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது என்றால் அவர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்லலாம். குடும்பத்தினருக்கு இந்த நபர் ஸ்பான்சராக இருப்பார். டிரம்ப் நிர்வாகத்தினால் கிரீன் கார்டு முறை தாமதம் ஆவதால் இதுபோல ஸ்பான்சர் முறையில் வந்தவர்கள் இந்தியா திரும்ப வேண்டி இருக்கும். இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை நீண்ட காலம் பிரிந்திருக்க வேண்டி இருக்கும்.

பிரச்சினை 4- அமெரிக்காவில் புகலிடம்

கடைசியாகப் புகலிடம் கோரியவர்களுக்கு கிரீன் கார்டு பிராசஸ் செய்வதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 51,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர். கடந்த 2018இல் 9,000ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2023 இல் 51,000ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகளில் 466% அதிகரித்துள்ளது. இதுபோல அங்கு புகலிடம் கோரிய இந்தியர்களுக்கும் இது சிக்கலாகவே மாறும்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+