"இந்துபோபியா.." ரொம்பவே பெரிய பிரச்சினை.. அமெரிக்காவில் மிக முக்கிய தீர்மானம்! இதுதான் முதல்முறை
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது... இந்துபோபியா குறித்து அமெரிக்கா மாகாணம் ஒன்று அதிகாரப்பூர்வமாக சட்டமியற்றுவது இதுவே முதல்முறையாகும்.
ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால், இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும், உலகின் பல நாடுகளும் இந்தியர்களைத் தொடர்ந்து குடியேறி வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான இந்தியர்கள் சென்று வருகின்றனர். இப்போதும் அமெரிக்காவில் பல இடங்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இந்துபோபியா
இப்படி பலரும் பல இடங்களில் சென்று குடியேறும் நிலையில், இந்துக்களுக்கு எதிரான இந்துபோபியா மனநிலை அதிகரித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது... இந்துபோபியா குறித்து அமெரிக்கா மாகாணம் ஒன்று அதிகாரப்பூர்வமாக சட்டமியற்றுவது இதுவே முதல்முறையாகும்.

ஜார்ஜியா
அந்த மசோதாவில், "100க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பின்பற்றும் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதம் இருக்கிறது. பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்து மதம் இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் இந்துக்கள் அதிகளவில் வாழும் அட்லாண்டா புறநகரில் உள்ள ஃபோர்சித் கவுண்டி பிரதிநிதிகள் லாரன் மெக்டொனால்ட் மற்றும் டோட் ஜோன்ஸ் ஆகியோர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

இந்துக்களின் பங்கு
மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், ஐடி,நிதி, கல்வித்துறை, என பல்வேறு துறைகளில் அமெரிக்க- இந்து சமூகம் முக்கிய பங்காற்றுகிறதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், யோகா, ஆயுர்வேதம், தியானம் ஆகியவற்றில் இந்துக்களின் பங்கால் பல லட்சம் அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் பல பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்து-அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் நடந்து வருவதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

சட்டம்
இந்து மதம் சிதைக்கப்படுவதையும் இந்துக்களின் புனித நூல்களைச் சிலர் திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் இந்துபோபியா தீவிரமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானம் ஜார்ஜியா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஜார்ஜியா ஸ்டேட் கேபிட்டலில் மார்ச் 22ஆம் தேதி இது தொடர்பாகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அங்குப் பிரதானமாக இருக்கும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சினை
அதில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இப்போது தீர்மானத்தை இயற்றியுள்ளனர். இது குறித்து அங்கு வசிக்கும் இந்து அமெரிக்கச் சமூக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரெப் மெக்டொனால்ட் மற்றும் ரெப் ஜோன்ஸ் உள்ளிட்டோர் இணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயன்றுள்ளனர்.. இந்து சமூகத்தை அவர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு முன்மொழிவு தான் இது.

வெறுப்புணர்வு
ஜார்ஜியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்து அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இது விளக்குகிறது. கடினமாக உழைத்து, சட்டத்தை மதித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்த முயலும் இந்து சமூகத்தினர் குறித்த பொய்யான தகவல்களைப் பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்த சில முயல்கின்றனர். இதை நாம் தடுக்க வேண்டும். இதற்காகச் சிறப்புச் சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்துக்களின் பங்கு
மருத்துவம், அறிவியல் மற்றும் பொறியியல், ஐடி,நிதி, கல்வித்துறை, என பல்வேறு துறைகளில் அமெரிக்க- இந்து சமூகம் முக்கிய பங்காற்றுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், யோகா, ஆயுர்வேதம், தியானம் ஆகியவற்றில் இந்துக்களின் பங்கால் பல லட்சம் அமெரிக்கர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் பல பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்து-அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் நடந்து வருவதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

சட்டம்
இந்து மதம் சிதைக்கப்படுவதையும் இந்துக்களின் புனித நூல்களைச் சிலர் திட்டமிட்டுக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் இந்துபோபியா தீவிரமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானம் ஜார்ஜியா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஜார்ஜியா ஸ்டேட் கேபிட்டலில் மார்ச் 22ஆம் தேதி இது தொடர்பாகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அங்குப் பிரதானமாக இருக்கும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சினை
அதில் இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இப்போது தீர்மானத்தை இயற்றியுள்ளனர். இது குறித்து அங்கு வசிக்கும் இந்து அமெரிக்கச் சமூக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரெப் மெக்டொனால்ட் மற்றும் ரெப் ஜோன்ஸ் உள்ளிட்டோர் இணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயன்றுள்ளனர்.. இந்து சமூகத்தை அவர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு முன்மொழிவு தான் இது.

வெறுப்புணர்வு
ஜார்ஜியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்து அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இது விளக்குகிறது. கடினமாக உழைத்து, சட்டத்தை மதித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை உயர்த்த முயலும் இந்து சமூகத்தினர் குறித்த பொய்யான தகவல்களைப் பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்த சில முயல்கின்றனர். இதை நாம் தடுக்க வேண்டும். இதற்காகச் சிறப்புச் சட்டத்தையும் கொண்டு வர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக

Click it and Unblock the Notifications