இனி ஹெச்-1பி விசா கிடைக்காது.. அமெரிக்கா முடங்கியதால் இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பு! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேறவில்லை. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் இப்போது முடங்கியுள்ளது. அமெரிக்கா முடங்கியுள்ளதால் இப்போது அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். இதனால் ஹெச்-1பி விசா பிராசஸ் செய்வது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியர்களுக்குக் கடும் சிக்கலைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான நிதி மசோதாவில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.. இதன் காரணமாக அமெரிக்க அரசு மொத்தமாக முடங்கியுள்ளது. அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். அத்தியாவசியமற்ற ஊழியர்கள் அனைவரும் ஊதியமில்லாத விடுப்பில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் அரசு அலுவலகங்களும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முடங்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் மிக மிக அத்தியாவசியமான அலுவலகம் மட்டுமே இயங்குகிறது. இதனால் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வரும் வரை H-1B விசா நடைமுறைகளும் நிறுத்தப்படும் என்று அமெரிக்கக் குடிவரவு வழக்கறிஞர் நிக்கோல் குணாரா தெரிவித்துள்ளார். அதாவது நிதி மசோதா நிறைவேறி, அமெரிக்காவில் முடக்கம் வாபஸ் பெறும் வரை H-1B விசா விண்ணப்பங்கள் பிராசஸ் செய்யப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எப்படி இயங்கும்
H-1B விசா செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் குணாரா விளக்கினார். முதலில் ஹெச்-1பி விசா பெற விரும்பும் ஒருவர் தொழிலாளர் துறையில் LCA (Labour Condition Application) எனப்படும் தொழிலாளர் நிலை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். LCA கிடைத்த பிறகு, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளிடம் (USCIS) H-1B விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும். அங்கு பிராசஸ் செய்த பிறகு ஹெச்-1பி விசா வழங்கப்படும்
இதில் USCIS அமெரிக்க பெடரல் அரசின் நிதியின் கீழ் இயங்குவதில்லை. அது சுயநிதியில் இயங்குவதால் இந்த முடக்கம் USCIS செயல்பாடுகளைப் பாதிக்காது. அதேநேரம் முதலில் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டிய தொழிலாளர் துறை அமெரிக்க பெடரல் அரசின் நிதியில் தான் இயங்குகிறது. இதனால் தொழிலாளர் துறை மூடப்பட்டுள்ளது. நிதி மசோதா நிறைவேறும் வரை ஹெச்-1பி விசா பணிகளைத் தொழிலாளர் துறை பரிசீலனை செய்யாது.
ஹெச்-1பி விசா கிடைக்காது
இது தொடர்பாக குணாரா மேலும் கூறுகையில், "அதாவது யாராலும் புதிய H-1B விசா பெறவோ அல்லது H-1B நிலையை மாற்றவோ முடியாது. முடக்கம் முடிவுக்கு வரை காத்திருக்க வேண்டும். அதேநேரம் ஏற்கனவே தொழிலாளர் துறை அனுமதி கிடைத்துவிட்டது என்றால் பிரச்சினை இல்லை.. USCIS சுயநிதியில் இயங்கும் அமைப்பு என்பதால் அதில் பிரச்சனை இருக்காது" என்றார்.
இந்தியர்களுக்குச் சிக்கல்
அமெரிக்கத் தொழில்நுட்பத் துறை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து திறமையான தொழிலாளர்களை H-1B விசா மூலமாக அமெரிக்காவில் பணி அமர்த்துகிறது. இருப்பினும், சமீபத்தில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா கட்டணத்தை $215-ல் இருந்து $100,000 ஆக உயர்த்தியது. இதுவே ஹெச்-1பி விசா பெறுவதைக் கடினமான ஒன்றாக மாற்றிய நிலையில், இப்போது அடுத்த அடி விழுந்துள்ளது. இதனால் இந்தியர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.
இது மட்டுமின்றி ஹெச்-1 விசா நடைமுறையில் புதிய ரூல்ஸ்களை கொண்டு வரவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போதுள்ள லாட்டரி முறையை நீக்கிவிட்டு, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டும் ஹெச்-1பி விசாவை கொடுக்கும் ஒரு முறையைக் கொண்டு வருவது குறித்தும் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications