மொட்டை தலை.. வெறித்து பார்த்த கைதிகள்! டிரம்பால் நிரம்பும் எல் சால்வடார் சிறைகள்.. பதற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு வெனிசுலா நாட்டை சேர்ந்த கேங் உறுப்பினர்கள் எல் சால்வடார் சிறைகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் திடீரென எல் சால்வடார் சிறைக்குப் போய் பரபர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் படங்களில் வரும் அச்சுறுத்தும் காட்சிகளுக்கு இணையாக இந்தக் காட்சிகள் இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடனேயே அவர் சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களை நாடு கடத்த ஏலியன் எனிமி சட்டத்தைப் பயன்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வெனிசுலா நாட்டை சேர்ந்த கேங் உறுப்பினர்கள் (ரவுடிகளை போல) எல் சால்வடார் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.

கிறிஸ்டி நோயம்
இதற்கிடையே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம், கடந்த புதன்கிழமை அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட எல் சால்வடார் சிறைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெனிசுலாவை சேர்ந்த கேங் உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டு பிறகு இந்த உயர் பாதுகாப்பு சால்வடார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்களைக் குறிவைத்து மோசமான குற்றங்களைச் செய்யும் புலம் பெயர்ந்தவர்களை மட்டுமே இங்கு நாடு கடத்துவதாக டிரம்ப் தரப்பு கூறுகிறது.
எல் சால்வடார் சிறையில் ஒரே அறையில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறையின் செல்களில் கைதிகள் ஒருமுறை அடைக்கப்பட்டுவிட்டால் அவ்வளவு தான். அதன் பிறகு செல் அறையில் இருந்து அவர்கள் வெளியே வரவே முடியாது. இந்த செல் அறைகளைப் பார்வையிட்ட கிறிஸ்டி நோயம், அங்கிருந்த ஆயுதக் கிடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவையும் பார்வையிட்டார்.
வெனிசுலா கேங்
எல் சால்வடார் சிறையில் மிக மோசமான நிலையில் கைதிகள் இருப்பதால் அங்கு நாடு கடத்துவதை மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், மோசமான வெனிசுலா கேங் உறுப்பினர்களை மட்டுமே எல் சால்வடார் சிறைக்கு அனுப்புவதாக டிரம்ப் நிர்வாகம் பெடரல் நீதிமன்றத்தில் கூறுகிறது.
சினிமாவை மிஞ்சும் காட்சிகள்
கிறிஸ்டி நோயம் தனது டூரின் போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள செல்லை சுற்றிப் பார்த்தார். அதற்கு முன்பு நின்று கொண்டு வீடியோவை வெளியிட்ட கிறிஸ்டி நோயம், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசினார். அப்போது வெனிசுலா சிறைவாசிகள் எந்தவொரு சத்தத்தையும் எழுப்பாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இது பார்க்கவே ஏதோ அச்சுறுத்தும் ஹாலிவுட் சினிமா படக் காட்சியைப் போல இருந்தது.
அந்த வீடியோ உண்மையில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. சிறை அறையில் இருந்து கைதிகள் வெளியே வரும் போது அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்படுகிறது. இதனால் அவர்களால் நிமிர்ந்து நடக்கக் கூட முடிவதில்லை. மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கும் இரு சிறை அதிகாரிகள் அவர்களை தரதரவென இழுத்துச் செல்கிறார்கள். மேலும், சிறையில் மொத்தமாகவும் அடைக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
சால்வடார் சிறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய கிறிஸ்டி நோயம், அதன் பிறகு அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார். அதில் அவர், "புலம்பெயர்ந்த ஒருவர் குற்றம் செய்தால்... நினைத்துக் கூட பார்க்க முடியாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். முதலில், எங்கள் நாட்டிற்குச் சட்டவிரோதமாக வராதீர்கள். அப்படி வந்தால் உங்களை நாடு கடத்துவோம்.. வழக்கு தொடர்வோம்.! ஆனால், இது அமெரிக்க மக்கள் குறிவைத்து குற்றம் செய்வோரை அடைத்து வைக்க நாங்கள் பயன்படுத்தும் சிறை" என்றார்.
டிரம்ப் நிர்வாகம்
மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பார்க்க ஹிட்லரின் நாஜி படைகளின் முகாம்ளை போல இருப்பதாக சொல்லி டிரம்பை ஹிட்லர் என்றும் கூட விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது போலவே தெரிகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக எல்சால்வடார் அதிகாரிகளுடன் கிறிஸ்டி நோயம் ஆலோசனை நடத்தினார். வன்முறை குற்றவாளிகளை அமெரிக்காவிலிருந்து அகற்றுவதே முதல் நோக்கம் என்று சொல்லி தங்கள் நடவடிக்கைகளை கிறிஸ்டி நோயம் நியாயப்படுத்துகிறார்.
கிறிஸ்டி நோயம் தான் பதவிக்கு வருவதற்கு முன்பே சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவே கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தொடர்ந்து கூறி வந்தார். டிரம்ப் ஆட்சியில் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்ட கிறிஸ்டி நோயம், இப்போதே நீங்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications