கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்தாலே கைது! டிரம்ப் நடவடிக்கையால் கலக்கத்தில் வெளிநாட்டினர்! ஏன் இப்படி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டினர் வசிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் நபர்களே கூட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் க்ரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் நபர்களை நேர்காணலுக்கு வரும்போது கைது செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, அங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரும் பல்வேறு கெடுபிடிகளைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது க்ரீன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களையும் கூட கைது செய்ய ஆரம்பித்துவிட்டது.

Donald Trump America visa

அமெரிக்க அதிகாரிகள்

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் இதுபோல பல கைதுகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசா காலம் முடிந்தவர்கள், அவர்களுக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றாலும் கூட இதுபோல கைது செய்யப்படுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. க்ரீன் கார்ட் விண்ணப்பித்து, அதற்கான நேர்காணலுக்குச் சென்றவர்கள் கூட அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்கிறார்களாம்.

இது தொடர்பாக அமெரிக்க வழக்கறிஞர் சாம் நாசெரி கூறுகையில், "கிரீன் கார்ட் கோரி விண்ணப்பிக்கும் நபர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்கிறார்கள். இதற்காக அமெரிக்காவின் ICE மற்றும் USCIS அதிகாரிகள் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. அதன்படி USCIS அலுவலகங்களில் நடக்கும் கிரீன் கார்டு நேர்காணல்களின்போது, யாரேனும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களைக் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்கிறார்கள். அங்கு அலுவலகத்தில் வைத்தே இந்த கைதுகள் நடக்கிறது

சட்டப்பூர்வமாக நுழைந்தவர்கள்

அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைந்தவர்கள். உரிய விசா வாங்கியே அமெரிக்காவில் வந்தவர்கள். ஏதோ சில காரணங்களால் கூடுதல் காலம் தங்கிவிட்டனர். விசா காலத்தை மீறிவிட்டனர். இன்னும் சிலர் அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள். பொதுவாக இதுபோன்ற சமயங்களில் கடுமையான நடவடிக்கை இருக்காது. ஆனால், இப்போது இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கிறார்கள் என புரியவில்லை" என்றார்.

அதாவது கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் கைது செய்யப்படுவதில்லை. மாறாக யார் விசா காலத்தைத் தாண்டி இருக்கிறாரோ அவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். விசா கோரி விண்ணப்பிக்கும் சமயத்தில் குடியேற்ற அதிகாரிகள் விசா காலத்தைச் சோதிக்கிறார்கள். அப்போது அனுமதிக்கப்பட்ட விசா காலத்தைத் தாண்டி ஒரு நாள் கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் அவர்களைக் கைது செய்துவிடுகிறார்களாம்.

எப்போது முதல்

இது தொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் ஹபிப் ஹஸ்பினி கூறுகையில், "கடந்த நவம்பர் 12ம் தேதி முதலில் இதுபோன்ற கைதுகள் நடந்தன. அதற்கு ஒரு நாள் முன்பு தான் ICE தனது புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது. அப்போது முதல் தான் இதுபோன்ற கைதுகள் தொடர்கதையாகின. இப்போது ஒரு சில அலுவலகங்களில் மட்டுமே இதுபோன்ற கைதுகள் நடக்கிறது. கிரீன் கார்டு நேர்காணல்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், கவனத்துடன் இருக்க வேண்டும்.. திடீர் கைதுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை கைது செய்யப்பட்டால் உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது சரியாக இருக்கும்" என்றார்.

திடீர் கைது

இப்படி தான் கடந்த 23 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவரையும் கிரீன் கார்டு விண்ணப்ப நேர்காணலின்போது அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேர்காணலின்போது அதிகாரிகள் ஒரு நிமிடத்தில் வருகிறேன் என சொல்லி இருக்கிறார். இருப்பினும், அடுத்து பின்னால் வந்த இரு குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்றே புரியாமல் அவர் தவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+