"உலக போர் ஆபத்து!" இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்? நேரடியாக உள்ளே வரும் அமெரிக்க உளவு துறை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் இப்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடக்கும் நிலையில், ஈரானும் இஸ்ரேலைத் தாக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ள அமெரிக்க உளவுத் துறை முக்கியமான அலர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது.

மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே பல மாதங்களாகப் போர் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த போரில் ஈரானும் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

iran israel US

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தச் சரியான நேரம் பார்த்து ஈரான் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா இப்போது முக்கியமான வார்னிங் ஒன்றைக் கொடுத்துள்ளது.

அமெரிக்க உளவு துறை: அதாவது அடுத்த சில நாட்களிலேயே ஈரான் அல்லது ஈரான் ஆதரவளிக்கும் அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தாக்குதல் இந்த வாரமே நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் எஃப் கிர்பி கூறியுள்ளார்.

ஈரான் தாக்குதலை எதிர்பார்த்தே இஸ்ரேல் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதை இஸ்ரேல் அரசே கூறியுள்ள நிலையில், இப்போது அமெரிக்க உளவுத் துறையும் இந்த விவகாரத்தில் முக்கியமான அலர்ட் கொடுத்துள்ளது.

ஈரான் கோபம் ஏன்: கடந்த ஜூலை 31ம் தேதி தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ்வை இஸ்ரேல் படுகொலை செய்தது. அதைத் தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படி அடுத்தடுத்து இரு தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி இருந்த நிலையில், இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே இஸ்ரேல் ராணுவம் ஹை அலர்ட் மோடில் இருக்கிறது.

உலக நாடுகள்: இந்த மோதல் பிராந்திய போராக மாறிவிடக்கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருக்கிறது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் உலக நாடுகள் முயன்று வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் பைடன் போர் நிறுத்தம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறுபுறம் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஜெர்மனி தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் நேரடியாக ஈரானின் அதிபர் மசூத்தை தொடர்பு கொண்டு தாக்குதல்களை நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.

மத்தியஸ்தம்: இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வந்தது. இருப்பினும், சில காரணங்களால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுப் போனது. இதற்கிடையே இந்த வாரம் வியாழக்கிழமை மீண்டும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள் ஈரான் தாக்குதலை நடத்தினால் இது மேலும் தாமதமாகும் என்று அஞ்சப்படுகிறது.

அதேநேரம் ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தலாம் என்பதால் அந்நாட்டின் எல்லையில் இஸ்ரேல் கூடுதல் ராணுவத்தை இறக்கியுள்ளது. மேலும், ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+