ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் ஈரான் போர் விரைவில் முடிவடைய இருக்கிறது. இது குறித்து டிரம்ப் பாசிட்டிவாக பேசியிருக்கிறார். இது இந்தியாவுக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு விரைவில் எட்டப்பட இருப்பதாகவும், எனவே போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்று கூறியிருக்கிறார். இது இந்தியாவுக்கு இருக்கும் எரிபொருள் சப்ளை நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trump Iran india

பேச்சுவார்த்தை எப்படி போகிறது?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார். "பேச்சுவார்த்தை ஸ்மூத்தாக போகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக 20 எண்ணெய் கப்பல்களை ஈரான் அனுமதிப்பது மரியாதையின் அடையாளம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானிலிருந்து ஒப்பந்தம் வருகிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும். ஈரானுடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்; அவர்கள் செய்ய வேண்டிய பல விஷயங்களை தெரிவித்து வருகிறோம். இன்று பல இலக்குகளை அழித்தோம், கடற்படை மற்றும் விமானப்படையும் களத்தில் செயல்பட்டது" என்றார்.

மறைமுக பேச்சுவார்த்தை

ஈரானுடன் நேரடியான, மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக டிரம்ப் தெரிவித்தார். ஈரான் ஆரம்பத்தில் 10, பின்னர் மேலும் 10 கப்பல்களை அனுப்பியது. சமீபத்தில், ஹார்முஸ் நீரிணை வழியாக 20 பெரிய எண்ணெய் கப்பல்களை அனுப்ப ஒப்புக்கொண்டதை, மரியாதையின் அடையாளம் என அவர் கருதினார். பராக் ஒபாமாவின் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) ஒப்பந்தத்தை தான் ரத்து செய்ததால் ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைப்பது தடுக்கப்பட்டதாக டிரம்ப் வாதிட்டார்.

ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மட்டுப்படுத்தவும், தடைகளை நீக்கவும் வழிவகையாக JCPOA உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2015 ஜூலை 14 அன்று வியன்னாவில் ஈரானுக்கும் P5+1 நாடுகள் (ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இறுதி செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு நிம்மதி

ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில் எட்டப்பட்டால், போர் முடிவுக்கு வரும். இது இந்தியாவுக்கு இருக்கும் எரிபொருள் நெருக்கடியை சரி செய்யும். மீண்டும் பழையபடி ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு வரும். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கேஸ் புக்கிங் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+