ஹார்வர்ட் பல்கலை பஞ்சாயத்து.. டிரம்ப் உத்தரவுக்கு தடை நீட்டிப்பு! வெளிநாட்டு மாணவர்கள் நிம்மதி
வாஷிங்டன்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடைவித்து டிரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தை பல்கலைக்கழகம் நாடியிருந்த நிலையில், வழக்கு முடியும் வரை டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே வெளிநாட்டு மாணவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
அமெரிக்க மாவட்ட நீதிபதி அலிசன் பரோஸ் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக சர்வதேச செய்தி ஊடகமான AFP தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க குடியுரிமை மற்றும் வருகைப் பணியாட்கள் துறை (DHS) செயலாளர் கிரிஸ்டி நோம் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பல்கலைக்கழகம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து பல்கலைக்கழகம், டிரம்பின் அரசு நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருந்தது.
இதற்கு எதிராக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க இயக்குநர் டோட் லியோன்ஸ் வரிந்து கட்டிக்கொண்டு பல்கலைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "பல்கலை வளாகத்தில் யூத எதிர்ப்பு மற்றும் வன்முறையை வளர்த்து வருகிறத. போதாத குறைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து சிலர் செயல்படுவதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன" என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கு 30 நாட்களுக்குள் பதிலடிளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
டிரம்பின் இந்த நடவடிக்கைள் நாட்டின் கல்வி சூழலில் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், சில மாணவர்களை மாற்று கல்வி நிலையத்தில் பயில கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. டிரம்பின் தடையால் கனடா பிரதமர் மார்க் கார்னியின் மகள், கிளியோ கார்னி உள்ளிட்டோர் பாதிக்கப்படலாம். இவர் ஹார்வர்டில் இளங்கலை மாணவியாக இருக்கிறார். முதல் ஆண்டு படிப்பை முடித்திருக்கிறார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டால் அதில் இவரும் பாதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications