இந்தியர்களுக்கு பேரிடி! அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. அமெரிக்க நீதிமன்றம் பரபர உத்தரவு
வாஷிங்டன்: H-1b விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தி இருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, H-1b விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் ஹெச்-1பி விசா கெடுபிடிகள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது இஷ்டத்திற்கு ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும், H-1B விசா கோரி விண்ணப்பிப்போருக்கும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அதன்படியே கடந்த செப்டம்பர் மாதம் H-1B விசாவுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. 5000 டாலரில் இருந்து ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டன.

விசா கட்டணம்
இது தொடர்பான அறிவிப்பை டிரம்ப் அப்போது வெளியிட்டிருந்தார். அப்போது கூட அவர் அதைத் தெளிவாக அறிவிக்கவில்லை. இது ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டிய கட்டணமா? இல்லை ஒவ்வொரு ஆண்டும் கட்ட வேண்டுமா.. ஏற்கனவே அமெரிக்காவில் இருப்போரும் இதை கட்ட வேண்டுமா என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தது. இதனால் அமெரிக்காவில் இருந்த இந்தியர்களும் கூட குழப்பமடைந்தனர்.
அதன் பிறகே டிரம்ப் நிர்வாகம் இது தொடர்பாக விளக்கமளித்தது. அதாவது ஒரு ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டிய கட்டணம் என்றும் புதிதாக விசா கோரி விண்ணப்பிப்போருக்கு மட்டுமே இது பொருந்தும் எனக் கூறப்பட்டது. மேலும், ஏற்கனவே அமெரிக்காவில் இருப்போர் இந்தக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிம்மதி அடைந்தனர்.
வழக்கு
இருப்பினும், புதிய H-1B விசாக்களுக்கு ஒரு லட்சம் டாலர் என்பது ரொம்பவே அதிகம்.. திறமையான வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இருக்கும் நிறுவனங்களுக்கு இது பெரும் சிக்கலையே கொடுக்கும். இதற்கிடையே விசாவுக்கான கட்டணத்தை முடிவு செய்யும் அதிகாரம் டிரம்பிடம் இல்லை என்றும் அமெரிக்க நாடாளுமன்றமே அதை முடிவு செய்ய முடியும் எனச் சொல்லி அங்குள்ள தொழில் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
நீதிபதி
இது தொடர்பான வழக்கை விசாரித்த ஃபெடரல் நீதிபதி, கட்டணத்தை உயர்த்த டிரம்பிற்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். டிரம்ப் தனது சட்டப்பூர்வ அதிகாரத்திற்குட்பட்டே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அமெரிக்க பெடரல் நீதிபதி பெரில் ஹவல் தெரிவித்தார். குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயலும் டிரம்பிற்கு இது மிகப் பெரிய பூஸ்ட்டை தருவதாகவே இருக்கும். அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமெரிக்க வர்த்தகச் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கட்டண உயர்வை அறிவிக்க டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்ற வர்த்தகச் சம்மேளனத்தின் வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.. விசா கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் டிரம்பிற்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
உத்தரவு
நீதிபதி மேலும் கூறுகையில், "டிரம்பின் இந்த முடிவு சரியானது இல்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது. அது குறித்து விவாதிப்பது நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. கொள்கை முடிவில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது. இந்த உத்தரவைப் பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து மட்டுமே விசாரணை நடந்தது. இதற்கான அதிகாரம் அதிபருக்குத் தரப்பட்டுள்ளது" என்றார்.
பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கு இருப்பதாகவும் அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ள நிலையில், வரும் காலங்களில் மேலும் பல கட்டுப்பாடுகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications