அதிர்ஷ்டம் எப்படியெல்லாம் அடிக்குது! கீழே கிடந்த பணத்தால் கார்பெண்டருக்கு அடித்த ரூ.6 கோடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் கீழே கிடந்து எடுத்த 20 டாலர் பணத்துக்கு வாங்கிய லாட்டரிக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் பரிசாக கிடைத்துள்ளது. இதனால் கார்பெண்டராக இருந்த நபர் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார். 20 டாலர் கொடுத்து லாட்டரி வாங்க கூட வழியில்லாதவருக்கு, திடீரென இந்த அதிர்ஷ்டம் எப்படி அடித்தது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
சினிமாவில் வருகிற மாதிரி ஒரே பாட்டில் கார், பங்களா வாங்கி கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமோ என அவ்வபோது பலரும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள். ஆனால் அது எல்லாம் சினிமாவில் தான் நடக்கும். ரியல் லைஃபில் நடக்க வாய்ப்பே இல்லை என்று 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் லாட்டரியில் பரிசு அடித்து ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி ஆகும் நிலைமை கூட வரும்.

நேற்று வரை அன்றாடம் உழைத்து பிளைப்பு நடத்தி வருபவர்கள் கூட, அடுத்த நாளில் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகும் நிலைமை லாட்டரியால் மட்டுமே சாத்தியம். அதற்காக லாட்டரி வாங்கிய எல்லாரும் பணக்காரர் ஆகிவிட முடியுமா என்றால் அதற்கும் சாத்தியமில்லை. அதிர்ஷ்டம் என்ற ஒரு மந்திரத்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.
லாட்டரியில் ஒருவர் பணக்கார் ஆனால், மறுபுறம் பல லட்சக்கணககான பேர் எதுவும் கிடைக்காமல் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை என்றாலும் கூட, பலருக்கும் லாட்டரி மீதான மோகம் இருக்கத்தான் செய்கிறது. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டவது கொடுக்கும் என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு..
அதை நிரூப்பிப்பது போல்தான் அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் 1 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. 20 டாலர் கொடுத்து லாட்டரி வாங்க கூட வழியில்லாதவருக்கு, திடீரென இரண்டு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: -
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் ஜெர்ரி ஹிக்ஸ். கார்பெண்டராக வேலை செய்யும் ஜெர்ர்ரி ஹிக்ஸ் லாட்டரி அடிக்கடி வாங்கும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் அவருக்கு பெரிசாக இதுவரை பரிசு அடித்தது இல்லையாம். இந்த சூழலில், கடந்த மாதம் 22 ஆம் தேதி, தனது பகுதியில் இருக்கும் ஒரு ஸ்டோருக்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் 20 டாலர் கீழே கிடந்துள்ளது.
இதை பார்த்ததும் ஜெர்ரி ஹிக்ஸ் சுற்றிப்பார்த்துவிட்டு.. அதை தானே வைத்துக்கொள்ளலாம் என்று எடுத்துக்கொண்டார். அப்போதுதான் அவருக்கு ஐடியா தோன்றியிருக்கிறது. இதை வைத்து ஏன் ஒரு லாட்டரி வாங்க கூடாது என நினைத்த ஜெர்ரி ஹிக்ஸ் அங்குள்ள ஒரு கடையில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஸ்கார்ட்ச் டிக்கெடை வாங்கிய ஜெர்ரி ஹிக்ஸ்க்கு முதல் முறை ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், இரண்டாவது முறையாக ஒரு டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
அதில்தான் 1 மில்லியன் டாலர் தொகை பரிசாக அடித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். கார்பெண்டராக இருந்த அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற லாட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, ஓய்வு காலத்திற்கு பிறகு தனது சேமிப்பாகவும் வைத்திருக்க போவதாக கூறியுள்ளார். முதலில் தற்போது உள்ள மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக உணவகத்திற்கு சென்று குடும்பத்துடன் விரும்பியதை சாப்பிட்டு மகிழக போவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications